சனி, 23 ஜூன், 2012

Bore Well 3வது நாளாக சிறுமியை மீட்கும் பணி தீவிரம்

குர்கான் : 4வயது சிறுமி மகியை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் உள்‌ள கசன் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி மகி விளையாடிய போது 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் ராணுவ ஜவான் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
.‌நேற்று நள்ளிரவில் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமிக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3வது நாளாக சிறுமியை மீட்கும் பணி நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக