ஞாயிறு, 17 ஜூன், 2012

mmm எனக்கு கோயில் வேணாம்! - ஹன்ஸிகா

வேணாம் வேணாம்... எனக்கு கோயில் வேணாம்! - ஹன்ஸிகா

குஷ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டி பாப்புலர் ஆன தமிழ் ரசிகமகாஜனங்கள், சின்ன குஷ்பு என்ற அடைமொழியுடன் வலம் வரும் ஹன்ஸிகாவுக்கும் கோயில் கட்டத் தயாராக நிற்கிறார்கள்.
இடமெல்லாம் பார்த்து, செங்கல், கருங்கல்லுக்குக் கூட ஆர்டர் கொடுத்துவிட்டதாக செய்தி வந்த நிலையில், 'வேணாம்... வேணாம் எனக்கு கோயில் கட்ட வேணாம்' என தெரிவித்துள்ளார் அம்மணி!
ஹன்சிகாவுக்கு மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கட்டுமானத்துக்கான செங்கல், ஜல்லி வாங்குவதற்காக அப்பகுதியில் ரசிகர்கள் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.

செப்டம்பரில் கோவில் கட்டிட வேலைகள் துவங்கும் என்றும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் ஹன்சிகா கோவில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்கின்றனர். பூஜை செய்ய பூசாரியும் நியமிக்கப்பட உள்ளார்.
இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை அணுகி கோவில் கட்ட அனுமதி கேட்டனர். எனக்கு கோவில் கட்டப்போவதாக அவர்கள் சொன்னதும் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டேன்.
ஆனால் மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரசிகர்கள் கோவில் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன்," என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக