செஸ் சாம்பியன் ஆனந்த்துக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்கினார் ஜெ.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன், இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பாண்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என்று பலத்தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசு தரப்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு விஸ்வநாதன் ஆனந்த் நேற்று தனது தற்போதைய நாடான ஸ்பெயினில் இருந்து இந்திய திரும்பினார்.
இன்று சென்னையில் உள்ள தலைமையகத்திற்கு சென்ற விஸ்வநாதன் ஆனந்த், முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஸ்வநாதன் ஆனந்த்தின் திறமையை பாராட்டிய முதல்வர், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
அப்போது மாநிலத்தில் செஸ் விளையாட்டை மேம்படுத்த தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக விஸ்வநாதன் ஆனந்த் உறுதி அளித்தார். சந்திப்பின் முடிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை, விஸ்வநாதன் ஆனந்த்திற்கு வழங்கி பாராட்டினார். இந்த சந்திப்பின் போது விஸ்வநாதன் ஆனந்த்தின் மனைவி அருணாவும் உடன் இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக