வெள்ளி, 8 ஜூன், 2012

CBI வாய்க்குள் India Cements& Cricket இயக்குனர் சீனிவாசன்

எல்லா பண முதலைகளும் சி.பி.ஐ.,வாய்க்குள் ; தமிழகத்தை சேர்ந்த சீனிவாசனுக்கும் சம்மன்

ஐதராபாத்: சமீப 3 ஆண்டுகளில் பெரும், பெரும் பணக்காரப்புள்ளிகள் எல்லாம் சி.பி.ஐ.,வலையில் சிக்கி சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மானேஜிங் டைரக்டரும் சிக்கியுள்ளார். இவரை சி.பி.ஐ., முன்பு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் இவர் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கும் என்பது தெரிய வரும். ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சி.பி.ஐ.,யினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பபட்டுள்ளார். இவர் மீது சுரங்க மோசடி வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
 இவரது தந்தை ராஜசேகரரெட்டி ஆட்சி காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு தாராள சலுகையினை பெற்று கொடுத்துள்ளார். இதனால் பயன் அடைந்த பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஜெகன் நடத்தி வந்த கம்பெனிகளில் கோடி, கோடியாக முதலீடு செய்தன. இதனால் தமது சொத்து எல்லை விரிந்து கொண்டே போனது. இவரது சொத்துக்கள் 600 கோடிக்கும் மேலாக இருப்பது தெரிய வந்துள்ளது.

காங்கிரசை எதிர்த்து அரசியல் துவக்கிய இவருக்கு தொடர்ந்து சிக்கல்கள் வரத்துவங்கின. தற்போது சி.பி.ஐ., கையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்துள்ளனர் என கோர்ட்டில் சி.பி.ஐ., தனது வாதத்தின்போது வைத்தது. ஜெகன் சொத்து தொடர்பாக பலக்கட்ட விசாரணை பலக்குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் சிக்கியிருக்கிறார். இவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் உள்ளார். ஐ.பி.எல்., சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார். இவர் ஜெகன் மோகன் நிறுவனங்களில் பல கோடிக்களை இந்தியா சிமென்ட்ஸ் பெயரில் முதலீடு செய்திருக்கிறார். ஏன் முதலீடு செய்தார் என்பது சி.பி.ஐ.,அதிகாரிகளின் கேள்வி.
என்னதான் சலுகை பெற்றார் ? ரகசிய விசாரணையில் சீனிவாசன் ஆந்திராவில் இருந்து தமது நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை சலுகை விலையில் பெற்றுள்ளார். பெரும் அளவிலான தண்ணீர் ஒதுக்கீடும் நடந்திருக்கிறது. இதற்கு அப்போதைய முதல்வர் ராஜசேகரரெட்டி ( விமான விபத்தில் உயிரிழந்தவர்) கரிசணம் காட்டியுள்ளார்.
எனவே இந்த முதலீடு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 15 ம் தேதிக்கு மேல் ஒரு நாள் சி.பி.ஐ., முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் சி.பி.ஐ.,யின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். பல்வேறு சிமென்ட்ஸ் நிர்வாகிகளுக்கும் பல வர்த்தக நிறுவன அதிபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாட்டின் முக்கிய வர்த்தக நிறுவன இயக்குனர்கள் , உயர் பொறுப்பில் இருந்தவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக