சிரஞ்சீவி மகன் ராம்சரண் திருமணம் :
150 வகை அறுசுவை உணவு
150 வகை அறுசுவை உணவு
சிரஞ்சீவி மகன் ராம்
சரண் தேஜாவுக்கும். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப்
சிரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனிக்கும் திருமணம் நிச்சயமானது.
ராம்சரண்தேஜா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடித்த மக தீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
ராம்சரண்தேஜா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடித்த மக தீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
ராம்சரண், உபசனா
திருமணம் ஐதராபாத்தில் இன்று காலை நடந்தது. ஆடம்பரமாக இந்த திருமணம்
நடத்தப்பட்டது. ஏற்கனவே திருமண சடங்குகள் கடந்த நான்கு நாட்களாக
தொடர்ச்சியாக நடந்தது. நேற்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
ஐதராபாத் அருகே உள்ள
மொய்னாபாத் கண்டிப்பேட்டையில் மண மகள் உபசனாவுக்கு சொந்தமான 120 ஏக்கர்
பண்ணை வீடு உள்ளது. அங்கு திருமணத்துக்காக மணப்பந்தல் அமைத்து இருந்தனர்.
பந்தல் அருகே சினிமா ஆர்ட் டைரக்டர்களை வைத்து சிவன் கோவில் சமையல்
கூடங்கள் பல கோடி செலவில் அமைக்கப்பட்டது.
மண மேடை மட்டும் 17
ஏக்கரில் அமைத்து இருந்தனர். மேடை முன்னால் 5 ஆயிரம் பேர் உட்கார
நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.ஒரே நேரத்தில் 2500 கார்களை நிறுத்த
பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
திருமண அழைப்பிதழுடன் மஞ்சள் நிற பாசை இணைத்து கொடுத்து இருந்தனர். அந்த பாஸ் வைத் திருந்தவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
மண மேடை வெளிநாட்டு
மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமக்கள் குடும்பத் தினர்
நேற்றே அங்கு வந்து விட்டனர். பிரபல ஆடை, வடிமைப்பாளர்களை வைத்து
செய்யப்பட்ட விலை உயர்ந்த ஆடைகளை ராம்சரணும் உபசனாவும் அணிந்து இருந்தனர்.
நடிகர், நடிகைகள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திருமணத்துக்கு
வந்திருந்தனர்.
உபசனா கழுத்தில் ராம்
சரண் தாலி கட்டியதும் அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு 150 வகை அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.
ராம்சரணுக்கு மணமகள் வீட்டார் சார்பில் ரூ.3 கோடி மதிப்புள்ள வெளி நாட்டு
கார் சீதனமாக வழங்கப்பட்டது. இந்த கார் மணமேடை அருகில் நிறுத்தி
வைக்கப்பட்டு இருந்தது.
ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக