முன்னாள்
மத்திய அமைச்சர் ஆ. இராசாவை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்
டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் 6.6.2012 அன்று சென்று நலம்
விசாரித்தார். உடன் இடமிருந்து ஆ. இராசாவின் துணைவியார் பரமேஸ்வரி, ஆ.
இராசா, மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மயூரி இராசா.
புதுடெல்லி, ஜூன்.7- ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா 15 மாத சிறை வாசத்துக்கு பிறகு கடந்த மாதம் 15 ஆம்தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தினமும் சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அவர் டெல்லியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் தமிழ் நாட்டுக்கு சென்றுவர அனுமதிக்க வேண்டும் என்று கோரி சி.பி.அய். நீதிமன்றத்தில் ஆ.இராசா மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த சி.பி.அய். நீதிமன்ற நீதிபதி சைனி, ஜூன் 8 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இராசா தமிழகத்துக்கு செல்லலாம் என்று அனுமதி வழங் கினார். அதோடு நீதிபதி சைனி சில நிபந்தனை களையும் விதித்தார். நேற்றிரவு அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்றிரவு ஆ.இராசா தன் இல்லத்தில் விருந்து கொடுத்தார். இதில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இன்று ராசாவும், அவர் குடும்பத்தினரும் தமிழகம் வரும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஆ.இராசா நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின் றன. தாரை தப்பட்டை முழங்க இராசாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. சென்னை வந்ததும் தி.மு.க. தலைவர் கலைஞரை முதலில் சந்தித்து பேச இராசா திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு செல்ல ஒன்றரை ஆண்டு களுக்குப் பிறகு அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு சென்றதும் முதலில் தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்து பேசுவேன். பிறகு என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நீலகிரிக்கு சென்று மக்கள் குறை கேட்பேன். இவ்வாறு ராசா கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக