புதன், 13 ஜூன், 2012

ஆண்டுக்கு ஒரு கார் மாற்றும் நித்தியானந்தா

nityananda quits favourite car before surrender ஹைடெக் சாமியார் நித்யானந்தாவின் கார்: சிறப்பு பார்வை

பத்திரிக்கைகளின் பரபரப்பு பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து வரும் நித்யானந்தா எந்த விஷயத்திலும் ஹைடெக் சமாச்சாரங்களைத்தான் விரும்புவார். மைக் முதல் லேப்டாப் வரை ஹைடெக் சாமியாராக வலம் வந்த நித்யானந்தா கார் விஷயத்திலும் ஹைடெக் அம்சங்களை ஃபோர்டு எண்டெவர் பிரிமியம் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகிறார்.
மதுரை ஆதின மடத்திற்கு சமீபத்தில் வந்திருந்தபோது கூட கேஏ04 எம்என் 4444 (KA 04 MN 4444) என்ற பதிவு எண் கொண்ட இந்த ஃபோர்டு எண்டெவர் காரில்தான் வந்திருந்தார். பிரிமியம் எஸ்யூவியான ஃபோர்டு எண்டெவர் பாதுகாப்பிலும் சரி, இடவசதியிலும் நிறைவான கார். இந்த காரின் முக்கிய அம்சங்களை காணலாம்.
பிரிமியம் எஸ்யூவி கார்கள் இடவசதியில் சிறப்பாக இருந்தாலும், இதில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிக விசாலமான இடவசதியை கொண்டுள்ளது.  முன் வரிசையும், இரண்டாவது வரிசை இருக்கைகளும் அதிக இடவசதி கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபோர்டு எண்டெவர் கார் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலிலும், 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட இரு மாடல்களில் கிடைக்கிறது.
இதில், 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சம் 143 பிஎச்பி ஆற்றலை வெளிப்படு்த்தும். 2 வீல் ட்ரைவ் சிஸ்டம் மற்றும் ஆப் ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற வகையில் ஆல் வீல் ட்ரைவ் மாடலும் உண்டு. டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத், டிவிடி ப்ளேயர் என சகல வசதிகளும் காருக்குள் இருக்கிறது.
ஏபிஎஸ், ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைவில்லை. நீண்ட தூர பயணங்கள் சென்றால் கூட பொருட்களை வைத்துக்கொள்ள இடவசதியும் இருக்கிறது. டில்ட் ஸ்டீயரிங் வசதியும் இருக்கிறது. ரூ.18.12 லட்சம் ஆரம்ப விலையில் இந்த பிரிமியம் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நித்யானந்தா காரிலேயே சுற்றி வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது கர்நாடக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். ஆனால், அவர் ஃபோர்டு எண்டெவர் காரில் வரவில்லை. கேஎல் 11, ஏஏ9669 (KL11AA9669)என்ற கேரள மாநில பதிவு எண் கொண்ட ஸ்கோடா காரில் கோர்ட்டுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொசுறு செய்தி: ஆண்டுக்கு ஒரு புதிய காரை மாற்றிவிடுவது நித்யானந்தாவின் வாடிக்கையாம்
ஆண்டுக்கு ஒரு கார் மாற்றும் நித்தியானந்தா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக