முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னை டி.நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்<
சேலம் அங்கம்மாள்
காலணி நில வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சேலத்துக்கு அழைத்துச் சென்றனர். சேலம்
புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அங்கம்மாள் காலணியில் 30
ஆண்டுகளாக குடியிருந்த வந்த 27 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை
கட்டாயப்படுத்தி, ரவுடிகளின் துணையோடு அவர்களை வெளியேற்றிவிட்டதாகவும்
தங்களுக்கு மேற்படி இடத்தில் குடியிருக்க பாதுகாப்பு வழக்க வேண்டும் என்று
பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களின்
முறையீட்டின்படி மேற்படி நிலத்தில் அவர்கள் வீடுகட்டி குடியிருந்துகொள்ள
பாதுகாப்பு வழக்கும்படி சேலம் நகர போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி கடந்த மாதம் பாதிக்கப்பட்ட 27
குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவரவர்கள் வசித்த இடங்கிலேயே குடிசை
அமைத்துக்கொண்டனர். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு அந்த குடிசைகளுக்கு மர்ம
நபர்கள் தீ வைத்துவிட்டு சென்று விட்டனர். இதில் 9 குடிசைகள்
தீயில் எரிந்துவிட்டன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் மகாலியிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்து தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 10 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று (04.06.2012) சென்னையில் இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.<இன்று (04.06.2012) மாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டவர்களை பற்றிய விவரங்களை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிப்பதாக சேலம் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக