திங்கள், 4 ஜூன், 2012

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது!

அனுமதியில்லாமல் குவாரி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் முரளிதரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பெரியசாமிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, போலீசார் அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி வந்தனர். இந்த வழக்கில் முரளிதரன் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஐ.பெரியசாமி மீது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இருப்பினும் அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று (04.06.2012) காலை திண்டுக்கல் டிஎஸ்பி ஆபிசில் சரண் அடைந்தார். கூம்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக