அம்மா (ஜெயலலிதா) வழங்கிய ஆட்டில் பாதிப் பெருமை ‘சித்தப்பு’வுக்கே!
Viruvirupu
“மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடு போதாது”
என்று முதல்வர் ஜெயலலிதா போர்க்கொடி தூக்கியுள்ள நேரத்தில், அதற்கு ஒரு
கிண்டலான பதில் வந்திருக்கிறது மத்திய அரசிடமிருந்து! “இவர்கள் வழங்கும்
ஆடு, மாடு, கிரைண்டருக்கு எல்லாம், நம்மால் பைனான்ஸ் செய்ய முடியாது”
என்பதே அந்தப் பதில்.மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, “மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது தவறானது” என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்த காரணத்தால், மாநிலத்தில் நடந்த கடந்த தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு தாராளமாக நிதி வழங்கியது என்றும், தற்போது அ.தி.மு.க. அரசுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். அது தவறான கூட்று என்கிறார் அமைச்சர் நாராயணசாமி.
“கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ரூ.20,000 கோடிதான் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கியது. தற்போது ரூ.28,000 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையைத் தவிர, தமிழகத்தில் நடக்கும் மத்திய அரசின் திட்டப் பணிகளுக்காக ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.44,000 கோடி தமிழகத்துக்கு வந்து சேர்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்கிறார். ரூ.44,000 கோடி ஒதுக்கியும் போதாது என்று கூறுவது சரியல்ல. இவர்கள் மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு போன்றவற்றை இலவசமாக வழங்குகிறேன் என்று கூறிவிட்டு, அதற்கான செலவையும் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது சரியல்ல” என்று அவர் கூறினார்.
நம்ம அமைச்சர்களும் ‘விலையில்லா ஆடு’ வழங்கும் விழாவில், “மாண்புமிகு முதல்வர், புரட்சித் தலைவி…. என்று துவங்கி நாலு முழம் பட்டங்களை கூறிவிட்டு, “இப்படியான பெருமைகள் பெற்ற அம்மாவின் ஆசியுடன் வழங்கப்படும் ஆடு” என்று சொல்லிவிட்டுத்தான், ஆட்டின் தலைக் கயிற்றைப் பிடித்து கொடுக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக