வியாழன், 14 ஜூன், 2012

சோனியா மறுப்பு! மன்மோகன் சிங்கை ஜனாதிபதி பதவிக்கு

 Cong Rejects Tmc Sp S Choice Pm As President
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என்ற மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
ராகுல் காந்தி அல்லது வேறு ஒருவரை பிரதமராக்க வசதியாக, சோனியா காந்தி தான் மன்மோகன் சிங்கின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்குமாறு மம்தாவிடம் சொன்னதாக தகவல்கள் பரவியுள்ளன. இந் நிலையில், இதை மறுக்கும் வகையில் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக தனது முடிவை மம்தா மற்றும் முலாயம் சிங்கிடம் காங்கிரஸ் தலைமை நேற்றிரவே தகவல் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலை சோனியாவை சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பின்னர் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கை சந்தித்தார். பின்னர் முலாயமும் மம்தாவும் ஜனாதிபதி பதவிக்கு 3 சாய்களைத் தெரிவித்தனர்.
1. அப்துல் கலாம், 2. மன்மோகன் சிங், 3. சோம்நாத் சாட்டர்ஜி. இந்த மூவரில் யாரை நிறுத்தினாலும் ஏற்போம் என்று கூறிய மூவரும், அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சாய்களான பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீத் அன்சாரி ஆகியோரின் பெயர்களை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டனர்.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை எக்காரணம் கொண்டும் மாற்றுவதில்லை என்றும், அவரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த முடியாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதன்மூலம் மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து தூக்க மம்தா மூலமாக சோனியா முயல்கிறார் என்ற குற்றச்சாட்டை மறுக்க காங்கிரஸ் முயன்றுள்ளது. அதே நேரத்தில் அப்துல் கலாமை சோனியா ஜனாதிபதியாக ஏற்க மாட்டார் என்பதால், சோம்நாத் சாட்டர்ஜியே இப்போதைக்கு ஜனாதிபதி பதவி ரேசில் முதலிடத்தில் உள்ளார்.
ஆனால், இன்னும் எந்தெந்தக் கட்சி யார் யார் பெயரைச் சொல்லப் போகிறது, பாஜக இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கிறது ஆகியவற்றைப் பொறுத்து நிலைமை மாறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக