கிருஷ்ணகிரி, ஜூன்10-கிருஷ் ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரை பஞ்சாயத்தில் உள்ள வள்ளி மலை கிராமத்தில் 200 நரிக்
குறவர் குடும்பத்தினர் நான்கு தலைமுறையாக வசித்து வரு கின்றனர்.
பெரும்பாலானோர் பாசி, ஊசி, விற்பனை செய்வ தையும், சிலர் வயல் வேலை களில்
ஈடுபடுவதையும் தொழி லாக கொண்டுள்ளனர். இந்த சமூகத்தில் இருந்து ஒரு மாணவர்,
முதல் முறையாக மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். அந்த மாணவரின் பெயர்
எம்.ராஜபாண்டி. ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில்
படித்த இவர், பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1167 மார்க் வாங்கி தேர்ச்சி
பெற்றார். கணிதம் மற்றும் உயிரியலில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழில்
190, ஆங்கிலத்தில் 186, இயற்பியலில் 196, வேதியியலில் 195 மதிப்பெண்களும்
வாங்கியுள்ளார். மருத்துவப் படிப்புக்கான இவரின் கட்-ஆப் மார்க் 197.5
ஆகும். இவர் மருத்துவப் படிப்புக்கு அரசு மருத்துவக் கல்லூரியில்
விண்ணப்பித்துள்ளார். தமிழகத்தில் நரிக்குறவர் இனம் மிகவும் பின்தங்கியோர்
பட்டியலில் (ஓ.பி.சி.) சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே மருத்துவக் கல்லூரியில்
சீட்டு கிடைப்பது நிச்சயமாகி உள்ளது. ராஜபாண்டியின் தந்தை 12 வருடங்களுக்கு
முன்பு மனைவி, மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார்.
எஸ்.எஸ்.எல்.சி.யில் 500-க்கு 463 மார்க் வாங்கினார். பிளஸ்-1, பிளஸ்-2
படிப்பை அதியமான் பள்ளியில் தொடர்ந்தார். இவரிடம் இருந்து மிகவும் குறைந்த
கட்டணம் மட்டுமே பள்ளி நிர்வாகம் வாங்கியது. ராஜபாண்டியனின் இரண்டு
தம்பிகளும் கோனம்பட்டி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படிக்கின்றனர்.
இதுபற்றி ராஜபாண்டி கூறியதாவது:- பிளஸ்-2வில் இவ்வளவு மார்க் வாங்கியதை
நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்ததை விட எனது உறவினர்கள்தான் அதிகமாக
சந்தோஷம் அடைந்தனர். பக்கத்து வீட்டு பெண்கள் எல்லோரும் என்னிடம் வந்து
டாக்டருக்கு படிக்க வேண்டும். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி,
சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள நமது ஜாதியை முன் னேற்ற பாடுபட வேண்டும்
என்று கேட்டுக் கொண்டனர். எனது ஜாதியின் முன்னேற்றத்துக்கு நிச்சயம் நான்
பாடுபடுவேன். எனது மருத்துவப் படிப்பை முடிக்க சேவை மனம் படைத்தோரின் உதவி
தேவைப்படுகிறது. - இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக