வியாழன், 14 ஜூன், 2012

திவ்யதர்ஷினி:எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.. 'டிடி' யின் அழகு ரகசியம்!

துறுதுறு பேச்சு, சிரிக்கும் கண்கள் என 14 வயதில் தொடங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியை இன்றைக்கும் அதே உற்சாகத்தோடு செய்து வருகிறார் டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
விஜய் டிவியில் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி - தீபக் ஜோடிக்காகவே பார்க்கின்றவர்கள் பலர் இருக்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியதைப் பற்றியும் தன் அழகின் ரகசியத்தை பராமரிப்பது குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார் படியுங்களேன்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி எனக்கு பிடித்தமானது என்பதால் அதை சந்தோஷமாக உற்சாகமாக செய்ய முடிகிறது. அக்கா பிரியதர்ஷினி டிவி நிகழ்ச்சித்தொகுப்பாளர் என்பதால் அதே வழியில் நானும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய பணியை தொடர்கின்றேன்.
எப்படி உங்களால மட்டும் இப்படி பேசிக்கிட்டே இருக்க முடியுது என்று நிறைய பேர் என்னிடம் இப்படித்தான் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் எல்லாம் எனக்கு சொல்ல தெரியல. ஆனா எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன்.

அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு விஷயம் என்னன்னா நம்மை ஸ்கிரீன்ல பார்க்கும் போது, எனக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கும். அது பாட்டுக்கு கடகடன்னு எதையோ காமெடியா பேசிக்கிட்டு இருக்கும்னு சொல்லணும். அதைவிடுத்து அந்தப் பொண்ணை பாரு எவ்வளவு செக்ஸியா இருக்கு. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்குன்னு சொல்ல கூடாதுன்னு நினைக்கிறேன்.
எனக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதற்கு நேரம் சரியாக இருக்கிறது. அதனால் தொடர்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தொடரில் நடிப்பதென்றால் அதற்கு டெடிக்கேட்டடாக இருக்க வேண்டும். எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
என்னுடைய உடலை அப்படியே பாதுகாப்பதற்கு சாப்பாட்டு ரகசியம் எல்லாம் எதுவும் இல்ல. நான் பிஸா, டிப் ப்ரை என்று எல்லாமே விரும்பி சாப்பிடுவேன். ஜிம், எக்சர்சைஸ் என்று எதுவும் கிடையாது. நானும் ஜிம்முக்குப் போறேன்னு ஒரு வாரம் போனேங்க. அதுக்கப்புறம் என்னால முடியலடா சாமின்னு விட்டுட்டேன். ஒரு விஷயம் என்னன்னா எங்க பேமிலியே ஒல்லியாகத்தான் இருப்பார்கள். ஒல்லி எங்க குடும்ப ராசி. இல்ல கொஞ்ச நாட்களா கதக் டான்ஸ் கற்று வருகிறேன். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை நானும், தீபக்கும் இணைந்து தொகுத்து வழங்குகிறோம். இந்த விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ரொம்ப ஜாலியா இருக்கு. டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கும், இந்த விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனக்கும் சரி, தீபக்குக்கும் சரி இது போன்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறை.
அந்த நிகழ்ச்சிக்கான விளையாட்டுகளை நானும், தீபக்கும்தான் தேர்வு செய்கிறோம். ஒவ்வொரு ஸ்டேஜுக்கான விளையாட்டுகளை நாங்கள் விளையாடி பார்த்த பின்பே அதை அரங்கத்துக்குக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கும். இந்த நிகழ்ச்சி சமீபத்தில்தான் ஆரம்பமானது. இருந்தாலும் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. டி.ஆர்.பி. ரேட் நன்றாக ஏறியிருக்கிறது என்று சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தீபக்கோடு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதே ரொம்ப காமெடிதாங்க. ஒரு வருடம் கழித்து நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் காம்பெயர் பண்றது பார்க்கிறவங்களுக்கு போர் அடிக்கும் என்ற நினைத்தோம். ஆனால் வெளியிடங்களுக்குப் போகும்போது நிறைய பேர் "நீங்க ரெண்டு தொகுத்து வழங்குவது பார்க்க ரொம்ப நல்லா இருக்கு' என்கிறார்கள். சந்தோஷமா இருக்கு என்று நம்மிடம் கூறி விடைபெற்றார் டிடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக