இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?
வினவு அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை.
கோலெடுத்தால் குரங்காடும் என்ற பழமொழி போன்று சாலையை மறித்தால்தான்
அரசு ஆடும் என்பது புதுமொழி. இது உழைக்கும் மக்களுக்கு தெரிந்த அனுபவ மொழி.
புதுவை வடமங்கலத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் யூனிலீவர் (டெட்ஸ்)
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமான போராட்டத்தை அனைவரும்
அறிந்திருப்பீர்கள். கடந்த ஒரு ஆண்டு காலமாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி
போராடியும் இதுவரையிலும் வழங்காமல் தொழிலாளர்களை அலைக்கழித்து வருகிறது
இந்நிறுவனம்.
ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் முறையாக பங்கெடுக்காமல் இழுத்தடித்து தொழிலாளர்களின் உழைப்பின் பலனை அபகரித்துக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள், புதுவையின் முதல்வர், கலெக்டர், தாசில்தார், தொழில்துறை ஆணையர், தொழில்துறை அமைச்சர் என அனைத்து ஆளும் கும்பல்களுக்கும் மனு கொடுத்தனர். மனு கொடுத்ததன் விளைவாக அரசிடமிருந்து எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதன் பின்விளைவாக நிர்வாகமானது உற்பத்தி குறைந்துள்ளதாக பொய்யான காரணம் காட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் 4 மாத சம்பளம் பிடித்தம் செய்தது.
தொழிலாளர்களை பட்டினியில் தள்ளுவதன் மூலம் தொழிலாளர்களில் சிலரை பலவீனப்படுத்தவும் சங்கத்தை உடைக்கவும் முயற்சித்தது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு 10-5-12-ல் சட்டவிரோத சம்பள பிடித்தத்தை உடனே வழங்கக் கோரியும், 7 தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 152 தொழிலாளர்களுடன் வில்லியனூர் வட்டாட்சியர் அவர்களை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த அரசானது மக்கள் நலனுக்கானது அல்ல என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தொழிலாளர்கள் அதை உழைக்கும் மக்களுக்கும் புரியவைக்கும் விதமான முழக்கங்களை எழுப்பி கைதாகினர். அன்று மாலையே சங்க முன்னனியாளர்களை சந்திப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் கலெக்டரைச் சந்தித்து, நிர்வாகமானது தான் கூறும் விதிமுறைகளையே அப்பட்டமாக மீறும் அதன் அயோக்கியத்தனத்தை விளக்கிக் கூறினார்கள். இதனையடுத்து .வரும் 21-5-12 அன்று HUL ல் ஆய்வு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.
21-5-12 அன்று HULன் நிர்வாக மேலாளர் மற்றும் அலுவலக மேலாளரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஊதிய உயர்வு சம்பந்தமாக கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இருதரப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் HUL நிர்வாகமோ அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இன்றளவும் புறக்கணித்து வருகிறது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக புதுவை அரசும் ஒரு மயிரையும் பிடுங்கிப் போடவில்லை. நியாயம் கிடைக்கும் வரையில் தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிடப்போவதுமில்லை என தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?
ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் முறையாக பங்கெடுக்காமல் இழுத்தடித்து தொழிலாளர்களின் உழைப்பின் பலனை அபகரித்துக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள், புதுவையின் முதல்வர், கலெக்டர், தாசில்தார், தொழில்துறை ஆணையர், தொழில்துறை அமைச்சர் என அனைத்து ஆளும் கும்பல்களுக்கும் மனு கொடுத்தனர். மனு கொடுத்ததன் விளைவாக அரசிடமிருந்து எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதன் பின்விளைவாக நிர்வாகமானது உற்பத்தி குறைந்துள்ளதாக பொய்யான காரணம் காட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் 4 மாத சம்பளம் பிடித்தம் செய்தது.
தொழிலாளர்களை பட்டினியில் தள்ளுவதன் மூலம் தொழிலாளர்களில் சிலரை பலவீனப்படுத்தவும் சங்கத்தை உடைக்கவும் முயற்சித்தது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு 10-5-12-ல் சட்டவிரோத சம்பள பிடித்தத்தை உடனே வழங்கக் கோரியும், 7 தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 152 தொழிலாளர்களுடன் வில்லியனூர் வட்டாட்சியர் அவர்களை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
இதிலும் எந்த பயனும் ஏற்படாததால் மே 18 அன்று கலெக்டர் அலுவலகம் முன்பு
சுமார் 350 தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக சங்க முன்னனியாளர்களை
பேச்சுவார்த்தைக்கு வருமாறு அலுவலக அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.
பேச்சுவார்த்தைக்கென்று சென்ற சங்க முன்னணியாளர்களை மிரட்டி பணியவைக்க
முயன்றனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வெளியேறிய தொழிலாளர்கள்
போராட்டத்தை வீச்சாக எடுத்துச் சென்றனர். பின்னர் காவல்துறை அனைவரையும்
கைது செய்தது.ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த அரசானது மக்கள் நலனுக்கானது அல்ல என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தொழிலாளர்கள் அதை உழைக்கும் மக்களுக்கும் புரியவைக்கும் விதமான முழக்கங்களை எழுப்பி கைதாகினர். அன்று மாலையே சங்க முன்னனியாளர்களை சந்திப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் கலெக்டரைச் சந்தித்து, நிர்வாகமானது தான் கூறும் விதிமுறைகளையே அப்பட்டமாக மீறும் அதன் அயோக்கியத்தனத்தை விளக்கிக் கூறினார்கள். இதனையடுத்து .வரும் 21-5-12 அன்று HUL ல் ஆய்வு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.
21-5-12 அன்று HULன் நிர்வாக மேலாளர் மற்றும் அலுவலக மேலாளரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஊதிய உயர்வு சம்பந்தமாக கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இருதரப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் HUL நிர்வாகமோ அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இன்றளவும் புறக்கணித்து வருகிறது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக புதுவை அரசும் ஒரு மயிரையும் பிடுங்கிப் போடவில்லை. நியாயம் கிடைக்கும் வரையில் தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிடப்போவதுமில்லை என தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக