வெள்ளி, 22 ஜூன், 2012

அழகிரி புறக்கணிப்பு திமுக செயற்குழு கூட்டம்

அ.தி.மு.க, அரசு ஆட்சிக்கு வந்து இதுவரை 10 க்கும் மேற்பட்ட மாஜி அமைச்சர்கள், 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,மாவட்ட செயலர்களை கைது செய்து சிறையில் அடைத்து வரும் போக்கு தி.மு.க.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பலரும் சிறையில் இருப்பதால் கட்சி பணிகள் பாதிப்பதோடு முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் கட்சி சார்பில் என்ன மாதிரியான நடவடிக்கைள் எடுக்கலாம் என்று ஆலோசிப்பதற்கு இன்று தி.மு.க., செயற்குழு கூட்டத்தை கட்சி தலைவர் கலைஞர் அவசரமாக கூட்டியுள்ளார். இதையடுத்து மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு கட்சித் தலைமை முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது.  கடிதத்தை வாங்கிக்கொண்ட மு.க.அழகிரி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வரவில்லை. மதுரை விக்கிரமங்களத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.பரபரப்பான சூழ்நிலையில் கூடும் திமுக செயற்குழுவை அழகிரி புறக்கணித்துள்ளது மதுரை திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக