சனி, 9 ஜூன், 2012

நித்தியானந்தா தலைமறைவு?: ஆசிரமத்தைக் கைப்பற்ற கர்நாடக அரசு திட்டம்

நித்தியானந்தா தலைமறைவு?: ஆசிரமத்தைக் கைப்பற்ற கர்நாடக அரசு திட்டம்
 சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆர்சிரமத்துக்கு எதிரே கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
 அப்போது, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையில் திடீரென்று மோதல் வெடித்தது.
 இந்நிலையில், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
 பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீடத்தில் நடைபெறும் ஆட்சேபகரமான நடவடிக்கைகள் காரணமாக, அந்த ஆசிரமத்தின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். தியான பீடத்துக்கு ஒரு நிர்வாகியை நியமிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே  நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக