அமலா பால் தமிழில் அறிமுகமான படமே, கிட்டத்தட்ட பலான படம் ரேஞ்சுக்குதான் இருந்தது.
ஆனாலும்
அவர் அடுத்து நடித்த மைனாவில் குடும்பப்பாங்காக வந்து, முதல் பட பலான பட
முத்திரையை துடைத்துக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக
நடிக்க மறுத்துவிட்டார்.இப்போதைக்கு அவர் மலையாளம், தெலுங்குப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் வரும் அனைத்துக் கதைகளையும் 'சரியில்லை' என்று கூறி தவிர்த்து வருகிறார்.
ஆனால் இப்போது என்ன மனமாற்றமோ... எல்லாவிதமான வேடங்களையும் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமலாபால் கூறுகையில், "சினிமா என்று வந்த பிறகு கவர்ச்சி தவறல்ல, என்னிடம் கதை சொல்லும்போது நீச்சல் உடையில் ஒரு காட்சி இருக்கிறது. ஓகேவா என்கிறார்கள். எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை. கதை, காட்சிக்கு அவசியம் என்றால் நீச்சல் உடையில் நடிப்பேன். தமிழில் உண்மையிலேயே நல்ல கதைகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. அமைந்தால் நிச்சயம் என் கால்ஷீட் தமிழ் படங்களுக்குத்தான்," என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக