தேசியக்
கல்வி ஆராய்ச்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12 -ம் வகுப்பு பாடப்
புத்தகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக கேலிச்
சித்திரத்துக்கு முதலில் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார், பின்னர் ராமதாஸ்,
வீரமணி என்று எல்லோரும் சேர்ந்துக்கொண்டார்கள்.
தற்போது திமுக தலைவர்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த கார்ட்டூன்
ஆ.கே.லக்ஷ்மனுடையது, இது வரைந்த காலகட்டத்தோடு இதை பார்க்க வேண்டும், போன
வாரம் செய்த சாம்பார் ஊசி போய் இருக்கிறது என்று இவர்கள் இப்போது கண்டனம்
தெரிவிப்பது நல்ல ஜோக். தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பானி பூரி, பேல்
பூரி என்று சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்...தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை + நகைச்சுவை பார்சேல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக