சனி, 30 ஜூன், 2012

பிரணாப் முகர்ஜி- கலைஞரை சந்தித்து ஆதரவு கோரினார்

 Pranab Mukherjee Chennai Presidential Poll Campaign
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கலைஞரை  நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
சென்னைக்கு இன்று மாலை 4.15 மணியளவில் வந்தடைந்த பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்ம் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் பிரணாப் முகர்ஜியை வரவேற்றனர்.

பின்னர் நேராக திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு பிரணாப் முகஜ்ரிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க வரவேற்கப்பட்ட பிரணாப் முகர்ஜி கலைஞரிடம் திமுகவின் ஆதரவை கோரினார்.
பிரணாப் முகர்ஜியை வரவேற்று சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கலைஞரின்  வீடு, சத்தியமூர்த்தி பவன் ஆகியவற்றில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 35,536 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கலைஞரை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக