வியாழன், 28 ஜூன், 2012

3-ம் தேதியே தி.மு.க-வினரை தூக்கிருவாங்க.

லீக்கான ரகசிய உத்தரவு: தி.மு.க. வி.ஐ.பி.-களை 3-ம் தேதி ‘தூக்கிடுங்க!’

Viruvirupu
மாநிலம் முழுவதும் தி.மு.க. நடத்தத் திட்டமிடும் மறியல் போராட்டத்தை, சிறை நிறப்பு போராட்டம் எனவும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. ஆனால், குறித்த தினத்துக்குமுன் சிறைக்கு சென்று விடாமல் கவனமாக இருக்க வேண்டுமென்று மாநிலச் செயலாளர்களுக்கு ரகசிய எச்சரிக்கை ஒன்றையும் செய்துள்ளது என்று தெரிகிறது.
“தமிழக அரசு, பழிவாங்கும் எண்ணத்துடன், தி.மு.க. நிர்வாகிகளை, குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது” என்பதே தி.மு.க.-வின் புகார். அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தி, அன்று அனைவரும் சிறை செல்வது என்பதே திட்டம். இந்த ஆர்ப்பாட்டத்துக்காக குறிக்கப்பட்டுள்ள நாள்,
ஜூலை 4-ம் தேதி.
“அட.. ஒருநாள் எக்ஸ்ட்ரா உள்ள இருங்களேன்”
மாநில அளவில் மாவட்ட, நகர, ஒன்றியங்களில், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. “எங்களில் சிலரை மட்டுமா கைது செய்கிறீர்கள்? இதோ அனைவரும் வருகிறோம் சிறைக்கு” என்று பெரிய நகரம் முதல் குக்கிராமம் வரை ஏராளமான தி.மு.க.-வினர் சிறைக்குச் சென்றால்தான், அது மிகப் பெரிய எதிர்ப்பாக தெரியும். ரதி.மு.க.-வுக்கும் அரசியல் ரீதியாக பலன் உண்டு.
இதை அ.தி.மு.க. அரசு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? நிச்சயம் இல்லை.
ஜூலை 4ம் தேதிக்கு ஒரு தினம் முன்னரே, தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலராளர்களில் பலரை ‘தூக்கிடுங்க’ என்ற ரகசிய உத்தரவு, காவல்துறை தலைமைக்கு போய்விட்டதாம். தமாஷ் என்னவென்றால், அங்கே உத்தரவு போய், ஒரு மணி நேரத்தில், உத்தரவின் விபரம் முழுவதும் தி.மு.க. தலைமையிடம் வந்துவிட்டது.
“காவல்துறை ‘பழைய விசுவாசி’ ஒருவரிடமிருந்து கிடைந்த நம்மகமான தகவல் இது” என்று கூறும் தி.மு.க. வட்டாரங்கள், இதற்கு பதில் நடவடிக்கை ரெடி என்கிறார்கள்.
அதையடுத்தே, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும், அலர்ட் போயிருக்கிறது. “ஜூலை 3-ம் தேதியே உங்களை தூக்கிருவாங்க. அதற்கு முன்னரே வீட்டை விட்டு கிளம்பிருங்க. வெளியே எங்காவது தங்கிவிட்டு, போராட்டம் நடக்கும் இடத்துக்கு நேரே வந்து சேருங்க” என்பதுதான் உத்தரவு.
பார்க்கலாம், யார் ஜெயிக்கிறார்கள் என்பதை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக