கார்த்தி நடிக்கும் சகுனி படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
சமீபத்திய
படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படம் சகுனி. அஜீத்தின்
பில்லா 2வுடன் மோதும் இந்தப் படத்தில் கார்த்தி - காஜல் அகர்வால்
நடித்துள்ளனர்.
அரசியல் - ஆக்ஷன் - நகைச்சுவை என கார்த்திக்கே உரிய
ஜனரஞ்சகத் தன்மையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
கார்த்தியின் அரசியல்வாதி கெட்டப் அவரது ரசிகர்களை உற்சாகத்துடன் 'தலைவா'
கோஷத்தை முன்னெடுக்க வைத்துள்ளது.இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் நேற்று பார்த்தனர். எந்த இடத்தில் கட் கொடுக்காமல், அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
ரூ 375 அரங்குகளில்...
வரும் ஜூன் 22-ம் தேதி, பெரிய அளவில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.
375 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. கார்த்தி நடித்த படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்.
சகுனியின் தெலுங்குப் பதிப்பும் ஒரே நேரத்தில் பிரமாண்டமாக வெளியாகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக