இந்த செய்தி நிச்சயம் அஜீத் ரசிகர்களுக்கு கடுப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் உண்மை.
அஜீத் நடிப்பில் தயாராகி, அடுத்த வாரம் வெளியாகவிருந்து, பின்னர் தள்ளிப் போயுள்ள பில்லா 2-ன் தெலுங்கு விற்பனை உரிமையை விட அதிக விலைக்குப் போயுள்ளது கார்த்தியின் சகுனி படம்.
தெலுங்கில் ஆரம்பத்திலிருந்தே கார்த்திக்கு நல்ல வரவேற்பு. சகுனி அவரது ஆறாவது படம். இப்போதே பெரிய நடிகர்கள் வரிசைக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சகுனி படத்தைப் பொறுத்தவரை, எல்லாமே பக்கா திட்டமிடலோடு நடக்கிறது. படத்தைத் தொடங்கியதிலிருந்து, முடித்து சென்சாருக்கு அனுப்பி, ரிலீஸ் தேதி அறிவித்தது வரை எந்தத் தடுமாற்றமும் இல்லா.
பில்லா 2ம் சகுனியும் ஒரு நாள் இடைவெளியில், அதவாது ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் வெளியாவதாக இருந்தன. ஆனால் கடந்த வாரம் சென்சாருக்குப் போன பில்லா 2-க்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. அத்துடன் படத்திலிருந்து பல வன்முறை காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர் அதிருப்தியில் உள்ளார்.
இப்போது 'பில்லா 2' திரைப்படத்தின் வெளியீடு எந்தவித அறிவிப்பின்றி தள்ளிப்போய்விட்டது.
ஆனால் சகுனி திரைப்படம் திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக