வியாழன், 24 மே, 2012

Zeetv சொல்வதெல்லாம் உண்மை..: அரங்கிலிருந்து அவுட்டோருக்கு

Zee Tamil Solvathellam Unmai
சொல்வதெல்லாம் உண்மை ரியாலிட்டி நிகழ்ச்சி இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் எகிறிவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒளிப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஜீ தமிழ் சேனலுக்குள் நுழைந்து அங்கு பணிபுரியும் பணியாளர்களை அடித்து விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணை இழுத்துச் சென்றதுதான். அதைத்தான் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவிலும் அதை ஒளிபரப்பினார்கள்.
ஊடகங்களிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிர்மலா பெரியசாமி போலீசாரின் அராஜகச் செயல் என்று தெரிவித்தார். சம்பத்தப்பட்ட பெண்ணோ போலீசாருக்கும், பெற்றோருக்கும் சாபம் விட்டார். போலீஸ் அதிகாரிகளோ தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்கள். இந்த நிகழ்ச்சியின் பரபரப்பான காட்சிகள் பிரபல ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பானதுதான் இதன் ஹைலைட் ஆக இருந்தது.இந்த சூட்டோடு சூட்டாக தற்போது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக களம் இறங்கிவிட்டார் நிர்மலா பெரியசாமி. முதன் முறையாக கோயம்புத்தூரில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு ஒளிப்பதிவு செய்ய உள்ளனர். கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக