சனி, 5 மே, 2012

மதுரை ஆதீனத்தில் Income raid! பின்னணியில் யார்?

viruvirupu.com கடந்த சில தினங்களாக மதுரை ஆதீனம் பற்றி வெளியான செய்திகளால் பலத்த சாச்சைகள் ஏற்பட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை ஆதீனத்துக்குள் அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர். அங்குள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், பண வரவுகள் ஆகியவை குறித்து மூத்த ஆதீனம் அருணகிரிநாதரிடம் விசாரணை நடத்தினர்.
இங்குதான் சமீபத்தில் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். 2,5000 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாத சுவாமி 1980-ல் பொறுப்பேற்றார். 293-வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அருணகிரிநாதர் அறிவித்தார். மதுரை ஆதீன மடாலயத்தில் கடந்த 29-ம் தேதி பட்டம் சூட்டும் விழா நடந்தது.
அந்தப் பதவியை பணம் கொடுத்து வாங்கியதை மறைமுகமாகவும் நித்தியானந்தா ஒப்புக்  கொண்டிருந்தார்.
“மூத்த ஆதீனத்துக்கு 1 கோடி ரூபா பாத காணிக்கை வழங்கியுள்ளேன். மேலும் 4 கோடி ரூபா வழங்கவும் உத்தேசித்துள்ளேன்” என்றார் அவர்.
தெற்கு ஆவணி மூலவிதியில் உள்ள மடத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. சோதனை நடத்திய ஐந்து அதிகாரிகள் 3 பெட்டிகளில் ஆவணங்களை எடுத்து சென்றனர். மதுரை ஆதீனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை.
சமீப காலமாக மதுரை ஆதீனத்தில் நடைபெற்ற பண மோசடிகள் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், பணத்துக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தாவுக்கு மோசமான இமேஜ் ஏற்பட்டிருந்தது. இரு தரப்புமே மதம் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் என்பதால், பற்றாக்குறை விஷயத்தில் ஒருவருக்கொருவர் கை கொடுக்கும் பிளானில், நித்தியானந்தா இளைய ஆதீனமாக அப்பாயின்ட்மென்ட் பெற்றார் என்கிறார்கள்.
மதத்தை வைத்துக்கொண்டு இவர்கள் செய்த இந்த திருக்கூத்துகள், நிஜமாக மதத்தை நேசிக்கும் பக்தர்களை குமுற வைத்தது. அப்படிக் குமுறியவர்களில் அரசு உயர்மட்ட அதிகாரிகளில் பலரும் உள்ளதாகவும், அந்தப் பின்னணியிலேயே வருமான வரித்துறையின் ரெயிடு நடைபெற்றதாகவும் சொல்கிறார்கள்.
அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, அருணகிரிநாத சுவாமி, நித்தியானந்தா ஆகிய இருவருக்கும் விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையே இந்த ரெயிடு என்றார்கள்.

! பின்னணியில் யார்?

Viruvirupu, Saturday 05 May 2012, 13:23 GMT
கடந்த சில தினங்களாக மதுரை ஆதீனம் பற்றி வெளியான செய்திகளால் பலத்த சாச்சைகள் ஏற்பட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை ஆதீனத்துக்குள் அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர். அங்குள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், பண வரவுகள் ஆகியவை குறித்து மூத்த ஆதீனம் அருணகிரிநாதரிடம் விசாரணை நடத்தினர்.
இங்குதான் சமீபத்தில் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். 2,5000 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாத சுவாமி 1980-ல் பொறுப்பேற்றார். 293-வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அருணகிரிநாதர் அறிவித்தார். மதுரை ஆதீன மடாலயத்தில் கடந்த 29-ம் தேதி பட்டம் சூட்டும் விழா நடந்தது.
அந்தப் பதவியை பணம் கொடுத்து வாங்கியதை மறைமுகமாகவும் நித்தியானந்தா ஒப்புக்  கொண்டிருந்தார். “மூத்த ஆதீனத்துக்கு 1 கோடி ரூபா பாத காணிக்கை வழங்கியுள்ளேன். மேலும் 4 கோடி ரூபா வழங்கவும் உத்தேசித்துள்ளேன்” என்றார் அவர்.
தெற்கு ஆவணி மூலவிதியில் உள்ள மடத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. சோதனை நடத்திய ஐந்து அதிகாரிகள் 3 பெட்டிகளில் ஆவணங்களை எடுத்து சென்றனர். மதுரை ஆதீனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை.
சமீப காலமாக மதுரை ஆதீனத்தில் நடைபெற்ற பண மோசடிகள் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், பணத்துக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தாவுக்கு மோசமான இமேஜ் ஏற்பட்டிருந்தது. இரு தரப்புமே மதம் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் என்பதால், பற்றாக்குறை விஷயத்தில் ஒருவருக்கொருவர் கை கொடுக்கும் பிளானில், நித்தியானந்தா இளைய ஆதீனமாக அப்பாயின்ட்மென்ட் பெற்றார் என்கிறார்கள்.
மதத்தை வைத்துக்கொண்டு இவர்கள் செய்த இந்த திருக்கூத்துகள், நிஜமாக மதத்தை நேசிக்கும் பக்தர்களை குமுற வைத்தது. அப்படிக் குமுறியவர்களில் அரசு உயர்மட்ட அதிகாரிகளில் பலரும் உள்ளதாகவும், அந்தப் பின்னணியிலேயே வருமான வரித்துறையின் ரெயிடு நடைபெற்றதாகவும் சொல்கிறார்கள்.
அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, அருணகிரிநாத சுவாமி, நித்தியானந்தா ஆகிய இருவருக்கும் விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையே இந்த ரெயிடு என்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக