பெங்களூர்: முதலில் தண்ணீர் பிசசை கேட்டார்கள், பிறகு மின்சாரம்.
அதையெல்லாம் கொடுத்தோம். இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கருணை பிச்சை
கேட்டார்கள். அதையும் கொடுத்தோம் என ஏளனமாக தமிழகத்தை பற்றி கமென்ட்
அடித்திருக்கிறார் நடிகை தன்யா.
காதலில் சொதப்புவது எப்படி, 7ஆம் அறிவு
உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். தமிழ்
சினிமா மூலம்தான் நடிகையாக இவர் அறிமுகமானார். இவர் இணையதளத்தில் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து கடுமையாக
விமர்சித்துள்ளார். இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
டியர் சென்னை... நீங்கள் குடிக்க தண்ணீர் பிச்சை கேட்டீர்கள். நாங்கள் கொடுத்தோம். மின்சாரம் பிச்சை கேட்டீர்கள். அதையும் நாங்கள் கொடுத்தோம். ட்வென்ட்டி 20 கிரிக்கெட் போட்டியில் ‘பிளே ஆப் போட்டிக்கு போவதற்கும் எங்களது கருணை தேவைப்பட்டது. விட்டுக்கொடுத்தோம். நீங்கள் (தமிழ் திரையுலகினர்) சினிமா வாய்ப்பையும் பிச்சை கேட்டால் அதையும் தருவோம். இவ்வாறு தன்யா கூறியிருக்கிறார்.
கிண்டல் செய்வது போல்
இவரது கமென்ட் தமிழ் திரையுலம், சினிமா ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட்
ரசிகர்களையும் இன்பக்கடலில் ஆழ்த்தி உள்ளது. சிலரின் தூண்டுதல் பேரில் தன்யா
இதுபோல் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக