செவ்வாய், 8 மே, 2012

வீடியோ கேம்: தந்தையைக் கொன்ற சவுதி சிறுவன்!

கடந்த மார்ச் 2012 புதிய கலாச்சாரத்தில்தான் வீடியோ கேம் எப்படி சிறுவர்களின் ஆளுமையை வன்முறையாகச் சீரழித்து வருகிறது என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு அத்தாட்சியாக ஒரு துயரச் செய்தி சவுதியிலிருந்து வந்திருக்கின்றது. தெற்கத்திய ஜிசான் பகுதியைச் சேர்ந்த நான்கே முக்கால் வயது கொண்ட சிறுவன், தந்தையிடம் சோனியின் பிளே ஸ்டேசன் எனும் வீடியோ கேம் விளையாட்டுக் கருவியை வாங்கி வருமாறு அடம் பிடித்திருக்கிறான். வெளியே சென்று வீடு திரும்பிய தந்தை அதை வாங்கவில்லை என்பதை அறிந்து அவர் கழற்றி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்று விட்டான். இசுலாமிய நாடுகளிலேயே மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டிருப்பதோடு, தூய வடிவில் இசுலாத்தை பின்பற்றிக் கொள்வதாக பீற்றிக் கொள்ளும் சவுதியிலேயே ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரம் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. சவுதி ஷேக்குகள் தமது பெட்ரோல் பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்கிறார்கள். அமெரிக்காவோ தனது கேளிக்கைப் பண்பாட்டை சவுதியில் முதலீடு செய்கிறது. விளைவு இந்தக் கொலை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக