செவ்வாய், 8 மே, 2012

சேது சமுத்திரம் புராணப் புளுகை வைத்து உச்சநீதி மன்றம் விசாரித்து

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தும் விதமாக பாசிசக் கோமாளி சுப்ரமணிய சுவாமி உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன்படி அங்கே ராமர் பாலம் இருப்பதாகப் புராணப் புளுகை வைத்து இந்த முட்டாள் கூறியதை ஒரு விசயமாக எடுத்துக் கொண்டு உச்சநீதி மன்றம் விசாரித்து வருகின்றது. இது புராணப் புரட்டு என்ற உண்மையைக் கூறினால் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ’இந்துக்களின்’ வாக்குகளை இழந்து விடுவோம் என்று அஞ்சும் காங்கிரசு அரசு இந்த வழக்கை நேரடியாக மறுத்து வாதாடவில்லை. இது குறித்து உச்சநீதி மன்றம் கருத்துக் கேட்ட போது, ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்று மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது‘ என்று விளக்கமளித்த காங்கிரசு அரசு தற்போது இது குறித்து உச்சநீதி மன்றமே முடிவெடுத்துக் கொள்ளும்படியும் சொல்லி விட்டது.இனி குடுமி மாமா சு.சாமி சொன்னதைத்தான் மக்கள் கருத்தென உச்சிக்குடுமி மன்றம் ஏற்றுக்கொள்ளப் போகிறது. மேலும் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று பாசிச ஜெயாவும் கோரியிருக்கிறார். வானரங்கள் கையால் மண்ணை அள்ளிப் பாலம் போட்டார்கள் என்ற பொய்யெல்லாம் ஒரு நாட்டின் தேசிய சின்னமென்றால் இந்தியாவை இனி முட்டாள்களின் தேசமென்றும் அழைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக