வெள்ளி, 4 மே, 2012

நாஞ்சில் சம்பத்:ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை

ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை : நாஞ்சில் சம்பத்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மே தின விழாவையொட்டி ம.தி.மு.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராக்கியண்ணன் வரவேற் புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ம.தி.மு.க. கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, 
’’மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் வந்தால் எந்த கட்சி வேண்டுமானாலும் வெற்றிபெரும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆளும் கட்சி எது உள்ளதோ அந்த கட்சி வெற்றி பெருவது வாடிக்கையாகி விட்டது.
ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை வீழ்த்த முடியாது என்று சொல்வதற்கு.   ஜெயலலிதாவை கடந்த ஆட்சிக் காலத்தில் பர்கூர் தொகுதியில் நின்றபோது அவர் வீழ்த்தப்படவில்லையா. பால்விலை, பஸ் கட்டணம் பலமடங்கு உயர்ந்து விட்டது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா நாடகமாடுகிறது’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக