சனி, 5 மே, 2012

மதுரை ஆதீனம் வைஷ்ணவியுடன் வெளிநாட்டுக்கு தப்ப முயற்சி?

மதுரை ஆதினத்தின் தனி உதவியாளராக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி(திருமணமகாதவர்)
நியமிக்கப்பட்டார்.
கடந்த 6 மாதத்திற்கு மேலாக மதுரை ஆதினத்திற்கு உதவியாளராக இருந்த வைஷ்ணவி, கடந்த திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆதின டத்தில் இருந்து காணவில்லை என்று ஆதினமும், நித்தியானந்தாவும் ரகசிய ஆலோசனை செய்து போலீசுக்கு போகாமல் தேடி வந்தார்கள். இந்த நிலையில் வைஷ்ணவி மாயமான செய்தி அம்பலமாகிவிட்டதால், பதட்டமானது மதுரை ஆதீன மடம். ஏற்கனவெ நித்தியானந்தாவை மதுரை அடுத்த ஆதீனமாக அறிவித்த சர்ச்சையே இன்னும் ஓயாமல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில் இந்த பிரச்சனையை வேறு வளரக்கூடாது என்று நினைத்த ஆதீனம், மடத்தை விட்டு சென்ற வைஷ்ண வியிடம் தூது மூலம் சமாதானம் பேசி மடத்துக்கே அழைத்து வந்துவிட்டதாக தகவல் வருகிறது.

சர்ச்சை - நெருக்கடிகளில் இருந்து தப்பித்து நிம்மதி காண, வைஷ்ணவியுடன் மதுரை ஆதீனம் வரும் மே 6ம் தேதி வெளிநாடு தப்பிச்செல்ல ஏற்பாடு செய்து வந்தார்.


ஆனால் நித்திக்கும் எதிராக போராட்டம் வலுத்து வருவதை கண்டு, வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டாராம் ஆதீனம்.


மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்ததை வாபஸ் பெறும் வரை ஓயமாட்டோம் என்று உண்ண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற ஆதீனங்கள் ஒன்றினைந்து வரும் 12ம் தேதி நித்தி - மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவிது மாபெரும் கண்டன பேரணி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் வெளிநாடுக்கு தப்பிச்சென்றுவிட்டால் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என்று உணர்ந்த மதுரை ஆதீனம் அந்த முடிவை கைவிட்டுவிட்டதாக தகவல் வருகிறது.


-முகில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக