பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள்
தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு அனைத்து கார்
நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில்,
பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு கார் நிறுவனங்கள்
முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காற்றை சக்தியாக கொண்டு இயங்கும் புதிய காரை ஐரோப்பாவை சேர்ந்த எம்டிஐ நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. சமீபத்தில் இந்த காரை வெற்றிகரமாக சோதனை செய்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 80 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 140 கிமீ வரை இந்த காரில் செல்ல முடியும் என்று தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக