தாண்டவம் படத்திற்காக நடிகை ஏமி ஜாக்சன் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாராசூட் மூலம் குதி்ததுள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஏமி ஜாக்சன், லக்ஷ்மி ராய் நடிக்கும் படம் தாண்டவம். அந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கு தான் படமாக்கப்படுகின்றன.
இந்த படத்தில் ஏமி ஜாக்சன் தான் ஒரு அழகு ராணி மட்டுமல்ல ஆக்ஷன் ராணியும் கூட என்பதை நிரூபித்துள்ளார். அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் ஒரு கைதேர்ந்த ஸ்கைடவர் என்று கூறப்படுகிறது.
தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த காட்சி அமைந்ததால் ரசித்து நடித்துள்ளார். இது தவிர அவர் மேலும் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஏமியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்க நீங்கள் இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் படம் அப்பொழுது தான் ரிலீஸாகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக