நித்தியின் கூலிப் படைக்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க
ஏனென்றால் ஆதீனங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல தேவையில்லை என்பது விதி'' என்று நித்தி ஆதீனமானதற்கான ரகசியத்தைப் போட்டு உடைத்தார்.
மதுரை ஆதீனத்தில் இப்போது சண்டை, சச்சரவு, அடிதடி, கொலைமுயற்சி என
ஏகத்துக்கும் கிரிமினல் காரியங்கள் அரங்கேறத் தொடங்க, ஆதீன பக்தர்களும்
ஆன்மீகவாதிகளும் தற்போது பலத்த கவலை யிலும் பதட்டத்திலும்
மூழ்கியிருக்கிறார்கள்.
ஆதீனக் குளறுபடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் நக்கீரன், கடந்த இதழில்
மதுரை ஆதீனத்துக்கு நெருக்கமான வைஷ்ணவி, கஸ்தூரி ஆகியோரின் பேட்டி யையும்,
பேட்டியில் அவர்கள் நித்தி தரப்புக்கு எதிராக எழுப்பிய குமுறல் களையும்
அப்படியே வெளி யிட்டிருந்தோம்.இந்த நிலையில் நித்தியும் ஆதீனம் அருணகிரியும் தங்க கிரீடம் தரித்து, தங்க
சிம்மாசனத்தில் அமர்ந்து, தங்க செங்கோலை ஏந்தி, ஏகப்பட்ட தங்க ஆபரணங்களைத்
தரித்தபடி, படா டோபமாக பலமுறை பேட்டிகளைக் கொடுக்க, இதை கவனித்த வருமான
வரித் துறையினர் 5-ந் தேதி காலை அதிரடி யாக ஆதீன மடத்திற்குள் புகுந்தனர்.
நித்தியின் திருவண்ணாமலை ஆசி ரமத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்த ஆதீனம்
அருணகிரி, ரெய்டால் திகைத்துப் போனார். ரெய்டு முடிந்த பிறகே சோகமாக
திருவண்ணாமலைக்குக் கிளம்பினார். அங்கும் ஒரு முடிசூட்டு நிகழ்ச்சி அரங்
கேறிய நிலையில், வைஷ்ணவிக்கு மதுரை ஆதீன மடத்தில் டார்ச்சர்கள் ஆரம்பித்தன.அங்கே என்ன நடந்தது என்பதை, அருகில் இருந்து பார்த்துப் பதைத்த மடத்துவாசி ஒருவரே நம்மிடம் விவரித்தார்... ""திருவண்ணாமலையில் இருந்த நித்தி, ஞாயிற்றுக்கிழமை மதியம் வாக்கில் மதுரை மடத்தில் இருக்கும் அவரது உதவியாளர் ரிஷிக்கு போன் போட்டு, "அந்த வைஷ்ணவி, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நம்மைப் பத்தியும் ஆதீன சொத்து விபரங்கள் பத்தியும் நிறைய போட்டுக் கொடுத்திட்டா. நான் ஆதீன மடத்துக்கு திரும்பும் போது வைஷ்ணவி அங்க இருக்கக் கூடாது. என்ன செய்வீங்களோ தெரியாது, அவகிட்ட இருக்கும் மடத்து சாவிகளைப் பிடுங்கிக்கிட்டு அடிச்சி விரட்டுங்க'ன்னு உத்தரவு போட்டார். உடனே ரிஷியும் வைஷ்ணவிக்கிட்ட போய், "ஆதீனத்தின் தனியறைச் சாவியை எங்கக்கிட்ட ஒப்படைச்சிட்டு ஒழுங்கா ஊரைப்பாக்க ஓடிப்போய்டு. இல்லைன்னா உதைபடுவே'ன்னு மிரட்டினார். வைஷ்ணவியோ "நான் எதுக்குப் போகணும்? நான் ஆதீனத்தால் தங்க வைக்கப் பட்டவள், அவர் வந்து என்னை போகச் சொல்லட்டும் நான் போறேன்' என்றார். மாலை 4.30-க்கு இந்த சச்சரவு பெருசாச்சு. ஆதீனத்தின் தனியறையில் அங்க இருக்கும் நகைகளுக்கும் பணத்துக்கும் பாதுகாப்பா உட்கார்ந்திருந்த வைஷ்ணவிக்கிட்ட ரிஷியும் அவர் மனைவி மத்யாவும் நான்கு தடிதடியான நித்தி ஆட்களும் போனாங்க. "உன்னிடமிருந்துதான் இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் எல்லாம் போயிருக்கு.
உன்மேல் நித்யானந்தா கோபமா இருக்கார். மரியாதையா ஓடிப்போய்டு'ன்னு பயங்கரமா மிரட்டினாங்க. வைஷ்ணவி அப்போதும் தைரியமா, "நீங்க வந்து மடத் துக்குள் நுழைஞ்ச பிறகுதான் மடத்துக்கும் ஆதீனத்துக்கும் கெட்டபெயர் உண்டாகி யிருக்கு. அதனால் மரியாதையா நீங்க மடத்தை விட்டு வெளியேறுங்க'ன்னு சொன்னாங்க. ரிஷியோ, "நீ பிச்சைக்காரிடீ, கோடீஸ்வர நித்தியை வெளியேறச் சொல்ல நீயாருடீ. இப்பவே கிளம்பு. இல்லைன்னா 40 லட்ச ரூபா ரொக்கத்தையும் ஒரு கிலோ தங்கத்தையும் நீ திருடிட்டன்னு போலீஸ்ல புகாரைக் கொடுத்து, உன்னை ஜெயிலுக்கு அனுப்பிடுவோம்டீ நாயே'ன்னு சத்தம் போட, பதிலுக்கு வைஷ்ணவியும், "நீங்க வெளீல போங்கடா நாய்களா'ன்னு திட்டினாங்க. இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்குப் போன ரிஷியின் மனைவி மத்யா ஓடிவந்து, வைஷ்ணவியின் சுடிதாரைப் பிடித்து இழுத்து அடிஅடின்னு அடிக்க ஆரம்பிச்சாங்க.
வைஷ்ணவியோ, "ஐயோ கொல்றாங் களே'ன்னு அலறினாங்க. இதைப்பார்த்த மடத்து சமையல்காரம்மா பிச்சையம்மாள் ஓடிவந்து, "அடப்பாவிகளா, வயசுப் பிள்ளையை அடிக்கா தீங்கடா. நல்லாருக்க மாட்டீங்க. அந்தப் புள்ளை தாண்டா ஆதீன சாமிக்கு ரெண்டு வருஷமா கூடவே இருந்து எல்லா உதவியையும் பண்ணிக் கிட்டு இருக்கு. அதைப்போயி அடிக்கிறீங் களேடா'ன்னு சத்தம் போட்டாங்க. இதைப் பார்த்து கோபமான ரிஷி, அந்தம்மாவைப் பிடிச்சி கீழே தள்ளிவிட்டார்.
அந்தம்மாவும் கத்திக் கூப்பாடு போட்டாங்க. அப்ப ரிஷியின் மனைவி, வைஷ்ணவியின் தலைமுடியைப் பிடித்து அடிக்க ஆரம்பிக்க, வைஷ்ணவியோ, "உங்களையெல்லாம் ஆதீனத்துக் கிட்ட சொல்லி என்ன பண்றேன் பாருங்க'ன்னு போனை எடுத்தாங்க. ஆதீனத்துக்கு போன் கிடைக்கலை போலிருக்கு. பிறகு தனக்குத் தெரிஞ்ச சில நிருபர்களுக்கும் ஆதீன மடத்து முன்னாள் சீடர் ராமராஜனுக்கும் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்துக்கும் போன் போட்டு, "என்னை நித்திக் கும்பல் கொலை பண்ணப் பார்க்குது. நித்தியின் கூலிப் படைக்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க'ன்னு கதறியழுதாங்க. அப்ப அவங்க போனை நித்தி ஆளுங்க பிடுங்கிட்டாங்க. ஒரே கதறலும் அழுகையுமா மடமே களேபரத்தில் மூழ்கிடிச்சி'' என்றார் பதட்டம் மாறாமலே.
மடத்தின் முன்னாள் சீடர் ராமராஜனும் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும் இந்தத் தகவலை போலீஸுக்குப் பாஸ் பண்ணி, ’அந்தப் பெண்ணைக் காப்பாத்துங்க’ என்றனர். விளக்குத் தூண் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு டீம் மடத்துக்கு விரைந்து வந்தது. அவர்களை நித்தி ஆட்கள் உள்ளேவிட மறுத்தனர். ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. உளவுத்துறை காவலர் சின்னையாவும் எஸ்.பி.சி.ஐ.டி. காவலர் சுதீஷும், நித்தி ஆட்களைப் பார்த்து சத்தம் போட்ட பிறகே போலீஸை உள்ளே அனு மதித்தனர்.
காவல்துறையின் இந்த போராட்டத்துக்கு மத்தியில், நாம் ஆதீன முன்னாள் சீடர் ராமராஜனைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டபோது ‘""என் செல்போனுக்கு வந்து வைஷ்ணவி, "என்னைக் கொல்லப்பாக்கறாங்க. அடித்து என் சுடிதாரையெல்லாம் கிழிச்சிட்டாங்க. எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க'ன்னு கதறியது உண்மைதான். வேண்டுமானால் நீங்களே வைஷ்ணவிக்கிட்ட பேசிப் பாருங்க''’என்றார் உறுதியாய்.
இதைத் தொடர்ந்து நாம் வைஷ்ணவியை தொடர்பு கொண்டபோது ‘""இப்பதான் சார், மதுரை போலீஸ் கமிஷனருக்கு நான் கைப்பட புகாரை எழுதிக்கிட்டு இருக்கேன். அதில் ஆதீனத்தை நித்தி என்னவெல்லாம் செஞ்சி வளைச்சாருங்கிறதை பகிரங்கமா எழுதியிருக்கேன். அதோட என்னை அடித்து சுடிதாரைக் கிழிச்சது பத்தியும் குறிப்பிட்டி ருக்கேன். இந்தக் கும்பலின் அட்டகாசம் தாங்கலை. நானே வெளில வரப்போறேன். நித்தி கும்பல் அடிச்சதில் எனக்கு நிறைய காயம் இருக்கு.
இதுக்கு பெண் போலீஸ் பாது காப்போடு எனக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கன்னும் இந்த புகார் மனுவிலேயே குறிப்பிட்டிருக்கேன்'' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவரிடமிருந்த செல்போன் பறிக்கப் பட்டுவிட்டது.
இந்தக் களேபரங்கள் குறித்து நித்யானந்தாவின் பி.ஆர்.ஓ. பாண்டி செல்வத்தை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது ‘""மடத்தில் அந்த வைஷ் ணவியின் ஆதிக்கம் தாங்கமுடியாத அளவுக்கு இருக்கு. ஆதீனத்துக்கு பலகோடி ரூபாய்களைக் கொடுத்து உதவியிருக்கும் எங்க குருஜி நித்யானந்தா பலம் தெரியாம வைஷ்ணவி எதிர்த்துக்கிட்டே இருக்கு. ஆதீனத்தையே அந்த வைஷ்ணவி கைக்குள்ள போட்டுக்கிட்டு 40 லட்ச ரூபாயையும் ஒரு கிலோ தங்கத்தையும் கடத்திக்கிட்டு போயிருக்கு. இது எல்லாமே எங்களுக்குத் தெரியும். இதைத் தட்டிக்கேட்டா, சுடிதாரைக் கிழிச்சிட்டோம்ன்னு டிராமா போடுது வைஷ்ணவி. இந்தப் பொண்ணால் ஆதீனத்துக்கும் மடத்துக்கும்தான் கெட்ட பேர். வைஷ்ணவியை மடத்தில் இனி இருக்கவிட மாட்டோம். என்ன செய்யப் போறோம்ன்னு பொறுத்திருந்து பாருங்கள்''’என்றார் காட்டமான காட்டத்தோடு.
இந்த நிலையில் ஒரு மணி நேர போராட் டத்திற்குப் பின், வைஷ் ணவியை மீட்க, விளக்குத் தூண் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் சென்ற போலீஸ் டீம், நீண்ட நேரத்துக்கு பின் வெறும் கையோடு திரும்பியது. ஏன்? உள்ளே என்ன நடந்தது? என காக்கிகள் தரப்பிலேயே விசாரித்தபோது, ""வைஷ்ணவி அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக் கதவைப் போராடித் திறந்தோம். கதறிக்கிட்டே வெளியே வந்த வைஷ்ணவி, "என்னை அடிச்சிக் கொடுமைப் படுத்தறாங்க. என்னைக் கொல்லப் பாக்கறாங்க. இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்கு நான்தான் தகவல் கொடுத்தேன்னு என்னை அடிச்சி என் சுடிதாரை எல்லாம் கிழிச்சிட்டாங்க. ஆவணம், நகை, பணமெல்லாம் இருக்கும் ஆதீனத்தின் தனி அறைச் சாவியைக் கேட்டும் கொடுமை படுத்தறாங்க'ன்னு கிழிக்கப்பட்ட சுடிதாரைக் காட்டி அழுதார். புகார் தர்றீங்களான்னு எங்க இன்ஸ்பெக்டர் கதிர்வேல் கேட்டார். "ஒரு நிமிஷம் இருங்க. ஆதீனத்துக்கிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு தர்றேன்'னு வைஷ்ணவி சொன்னாங்க. அவங்க ஆதீனத்தை மற்றொரு செல்போன் மூலம் தொடர்புகொண்டு எல்லா விஷயத்தையும் சொல்லி அழுதுட்டு, போலீஸிடம் புகாரைக் கொடுக்கப் போறேன்னு சொன்னாங்க. ஆதீனமோ, "அவசரப்படாதே, நான் மதுரைக்கு வந்துக் கிட்டு இருக்கேன். அதுவரை போலீஸ் கிட்டயோ பிரஸ்காரங்கக்கிட்டயோ எதையும் பேசாதே. இனி உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன்'னு கெஞ்சலாப் பேசினார்.
இதன்பிறகு மனசு மாறிய வைஷ்ணவி, "இப்போதைக்கு புகார் தர விரும்பலை சார்'னு சொல்லிட்டாங்க. "ஆல்ரைட்'டுன்னு சொன்ன இன்ஸ்பெக்டர், அங்கிருந்தே எங்க மேலதி காரிகளுக்கு விபரத்தைச் சொன்னார். மேலதி காரியோ, "அப்ப சரி, 20 பேர் அடங்கிய ஆயுதப்படை போலீஸை பாதுகாப்புக்கு நிறுத் துங்க. அசம்பாவிதம் எதுவும் நடக்காமப் பார்த்துக்கங்க'ன்னு சொல்லிட்டார். இதன்பின் இரவு 8.55-க்கு நித்திக்கு சொந்தமான கே.ஏ.01-எம்.ஏ.7233 என்ற எண்ணுள்ள சைரன் பொருத்திய இனோவா காரில், ஆதீனமும் நித்தியும் வந்தாங்க. ஏகப்பட்ட போட்டோகிராபர்கள் படம் எடுக்கறதைப் பார்த்து மறுபடியும் விருட்டுன்னு எங்கோ போயிட்டு அரை மணி நேரம் கழிச்சி அந்தக் கார் வந்துச்சி''’என்றார்கள் விபரமாய்.
பிறகு மடத்திற்குள் என்ன நடந்தது? ஆதீனத்தின் மீது அன்பு வைத்திருக்கும் அந்த மடத்து ஊழியர், ""வைஷ்ணவி தாக்கப்பட்டதில் கோப மாயிட்டார் ஆதீனம். அடிச்ச வங்கள்லாம் வைஷ்ணவி கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்கன்னு கறாராச் சொல்லிட்டார். நித்தியும் தலையசைக்க, ரிஷி, அவர் மனைவி மத்யா உள்ளிட்ட எல்லோரும் வைஷ்ணவியின் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாங்க. இதன்பிறகுதான் வைஷ்ணவி அமைதி யடைஞ்சாங்க.
ஆதீனம் நல்லவர்தாங்க. ஆனா அவர் தேவை யில்லாம அந்தக் கும்பல்கிட்ட மாட்டிக்கிட்டு அவதிப்படறார். தனக்கு நீதித்துறை மூலம் பாதகமான தீர்ப்பு வந்தா, தனது சீடரான சொரூபானந்தாவை ஆதீன நாற்காலியில் உட்காரவைக்கிறது தான் நித்தியின் பிளான். அதுக்காக சொரூபானந்தாவை ஏதாவது ஒரு ஆதீனத்தில் இப்பவே தம்புரானா சேர்த்து பயிற்சி எடுக்க வைக்கிறதுன்னு அந்த டீம் இப்ப முடிவெடுத்திருக்கு. எப்படியிருந்தாலும் மதுரை ஆதீனத்தை தன் கையில் இருந்து நழுவ விட்றக்கூடாது என்பதில் ரொம்ப கவனமா இருக்கு நித்தி தரப்பு'' என்றார் கவலையாய்.
மதுரை ஆதீனத்துக்குள் பல திக்கிலிருந்தும் பலமான சூறாவளி வீசிக்கொண்டிருக்கிறது.
-முகில்
படங்கள் : அண்ணல்
6 மணி நேர ரெய்டு!
வருமான வரித்துறை இணை கமிஷனர் கிருஷ்ணசாமியின் உத்தரவின் பேரில் 12 பேர் கொண்ட அதிகாரிகள் டீம், ஆயுதப்படை போலீஸ் டீமின் பாதுகாப்போடு 5-ந் தேதி காலை 8.30-க்கு ஆதீன மடத்தை முற்றுகையிட்டது. மடத்திற்குள் பெண்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு 2 பெண் அதிகாரிகளும் டீமில் அமர்த்தப்பட்டிருந்தனர். நித்தியின் உதவியாளர் ரிஷியும், பி.ஆர்.ஓ. பாண்டி செல்வனும், நித்யானந்தா அனுமதியில்லாமல் உங்களை அனுமதிக்க முடியாது என்று தடுத்தனர். பின்னர் திருவண்ணாமலையில் இருந்த நித்தியை அவர்கள் தொடர்பு கொண்டு பேச, "கொஞ்சம் காத்திருக்கச் சொல்லுங்கள்.
அங்கிருக்கும் ஆதீனத்திடம் முதலில் நான் கொஞ்சம் பேசிக்கொள்கிறேன்'’என்றார். பின்னர் நித்தியிடமிருந்து சிக்னல் வந்தபிறகே அதிகாரிகளை மடத்திற்குள் அனுமதித்தனர். அதிகாரிகள் மடத்தின் கதவுகளை முதலில் பூட்டினர். ரெய்டு முடியும் வரை உள்ளே இருப்பவர்களை வெளியேயும், வெளியே இருப்பவர்களை உள்ளேயும் அனுமதிக்கவில்லை. எல்லா அறைகளையும் துருவித் துருவி சோதனையிட்ட அதிகாரிகள், கணக்கில் வராத நகைக்குவியல்களையும் ஆவணங்களையும் ரொக்கத்தையும் கைப்பற்றினர். இவைகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் ஆதீனம் மௌனம் சாதித்தார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களை மூன்று பெட்டிகளில் அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் வைஷ்ணவியிடம் தனி யறையில் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.
வீடியோ கேமரா முன்னிலையில் நடந்த இந்த விசாரணையில், வைஷ்ணவி, நித்தி வருவ தற்கு முன் மடம் எப்படி இருந்தது என்பதையும் வந்த பிறகு எப்படி அலங் கோலம் ஆகிவிட்டது என்பதையும் விரிவாக வாக்குமூலமாகச் சொல்லி யிருக்கிறார்.
6 மணி நேரம் நீடித்த சோதனைக்குப் பின், கைப்பற்றப்பட்ட பொருட் களோடு வெளியேறினர் அதிகாரிகள். மடத்து ஊழி யர்களோ ""நித்தி கும் பல் வந்த பிறகு ஆமை புகுந்த வீடாகிவிட்டதே மடம்'' என்று புலம் பினர்.
ரெய்டு முடிந்து மதுரையில் இருந்து கிளம்பிய ஆதீனம் இரவு 11:20-க்குத்தான் திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். நித்யானந்தா வாங்கி வைத்திருந்த கிரீடத்தை அவர் தலையில் சூட்டி, செங்கோலை கையில் தந்து, தங்கத்திலான ருத்ராட்ச மாலையை அவரது கழுத்தில் அணிவித்து பட்டாபிஷேகம் நடத்தினார் ஆதீனம்.
இரவு 12 மணிக்கு பேச தொடங்கிய ஆதீனம், ’""1000 கோடிக்கு மேல் சொத்துள்ள என் மடத்துக்கு நித்யானந்தாவை ஆதீனமாக நியமித்துள்ளேன். என் மடத்துக்கு நான் ஆதீனத்தை நியமிக்க நான் எவனிடம் கேட்க வேண்டும். என் சீடர் நித்யானந்தா ஜெய்ஜான்டிக் ஃபிகர். ஆண்மையுள்ள ஆணழகன். தமிழகத்தில் இப்படியொரு ஆதீனத்தை உங்களால் காண முடியாது. அவரை தவிர வேறு யார் எனக்கு பொருத்தமான ஆதீனமாக கிடைப்பார்கள். அவர் மீது பாலியல் புகார் உள்ளது என்கிறார்கள். யார்தான் பாலியல் புகாரில் சிக்கவில்லை. பாலியல் புகாரையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் இனி நீதிமன்றத்துக்கு செல்லத் தேவையில்லை. ஏனென்றால் ஆதீனங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல தேவையில்லை என்பது விதி'' என்று நித்தி ஆதீனமானதற்கான ரகசியத்தைப் போட்டு உடைத்தார்.
நித்தியோ’""நான் 293-வது சந்நி தானமாக நியமிக்கப்பட்டவுடன் 5 கோடி ரூபாய் தருவதாகச் சொன்னேன். அதை தந்து விட்டேனோ என தேடி எடுக்க வந்த வருமான வரித்துறைக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. என்னை இந்து அமைப்பு ரவுடிகள் எதிர்க்கிறார்கள். அந்த அர்ஜுன் சம்பத் என்ற ரவுடி மேல் எத்தனை எத்தனை வழக்குகள் உள்ளது தெரியுமா? அவனெல்லாம் என்னை ஏசுகிறான்''’என்றார் இளக்காரமாக.
-ராஜா
thanks nakkeeran +Pl.Ramasamy New Delhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக