வியாழன், 3 மே, 2012

ஐ.ஜி., பிரமோத்குமார் நேற்று கைது கமலவள்ளியை கடத்தி, பணம் பறித்த வழக்கில்,

கோவை:முதலீட்டாளர்களிடம் 1,500 கோடி ரூபாய் மோசடி செய்த, திருப்பூர், "பாசி' நிறுவன பங்குதாரர் கமலவள்ளியை கடத்தி, பணம் பறித்த வழக்கில், ஐ.ஜி., பிரமோத்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். டில்லியில் அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். திருப்பூரில், "பாசி குரூப் ஆப் கம்பெனிஸ்' என்ற பெயரில், பல்வேறு முதலீட்டு நிறுவனங்களை, மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், சென்னையைச் சேர்ந்த கமலவள்ளி ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் மூவரும், கரன்சி வர்த்தகம் செய்வதாகக் கூறி, நாடு முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், முதலீடுகளை பெற்றனர்.

மோசடி:இவ்வாறு வசூலித்த 1,500 கோடி ரூபாயை திருப்பித் தராமல், மோசடி செய்து விட்டதாக, மூவர் மீதும், முதலீட்டாளர்கள் அடுத்தடுத்து புகார் செய்தனர். இதையடுத்து, "பாசி' நிறுவன பங்குதாரர்கள் மீது, திருப்பூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.பல மாநிலங்களில் மோசடி நடந்துள்ளதாலும், வெவ்வேறு அரசு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அசாமில் பதுங்கியிருந்த மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகிய மூவரையும், கடந்தாண்டு ஆகஸ்ட்11ம் தேதி சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.பறிப்பு:இந்த வழக்கின் ஆரம்ப காலத்தில், "பாசி' நிறுவன பங்குதாரர் கமலவள்ளியை கடத்திச் சென்று, மிரட்டி, 3.97 கோடி ரூபாய் பணம் பறித்ததாக, அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி., பிரமோத்குமார், திருப்பூர் டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் மீது புகார் எழுந்தது.தன்னை கடத்தி, பணம் பறித்தது தொடர்பாக, கமலவள்ளியும் வாக்குமூலம் அளித்தார்.
வலுவான ஆதாரங்களைத் திரட்டிய சி.பி.ஐ., அதிகாரிகள், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்."தானும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது' என்பதை அறிந்ததும், தற்போது ஆயுதப்படை ஐ.ஜி.,யாக பதவி வகிக்கும் பிரமோத்குமார்,மருத்துவ விடுப்பில் சென்று விட்டார்; முன் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தார்.ஆனால், "பிரமோத்குமாருக்கு முன் ஜாமின் தரக்கூடாது' என்று, சி.பி.ஐ., தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது. இதையடுத்து, முன் ஜாமின் கோரும் மனுவை தள்ளுபடி செய்து, கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், தீவிர தேடுதலில் ஈடுபட்ட சி.பி.ஐ., அதிகாரிகள், டில்லியில் பதுங்கியிருந்த ஐ.ஜி., பிரமோத்குமாரை நேற்று கைது செய்தனர். அவர், விசாரணைக்காக கோவை கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக