திங்கள், 7 மே, 2012

காற்றாலை மூலம் ஒரே நாளில் 2,500 மெகாவாட்

தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் ஒரே நாளில் 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இது புதிய சாதனை ஆகும். இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.

 இங்கு 1980-ம் ஆண்டு முதலாவது காற்றாலை நிறுவப்பட்டது. இப்போது 10,882 காற்றாலைகள் உள்ளன. இவற்றின் மொத்த மின் உற்பத்தி திறன் 6,996 மெகாவாட் ஆகும். ஆனாலும், தொழில்நுட்ப கருவிகளின் பற்றாக்குறை, விநியோகத்தில் உள்ள பிரச்சினை ஆகியவை காரணமாக கிட்டத்தட்ட 3,500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய முடியும்.  எனினும், இந்த உயர் அளவை ஒருபோதும் எட்டியதில்லை.கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்ச் 24 -ந் தேதி அதிகபட்ச அளவாக 2,300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அதைவிட கூடுதலாக 2,500 மெகாவாட் கிடைத்துள்ளது. இது, காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் புதிய சாதனை ஆகும். தமிழ்நாட்டில்- குறிப்பாக தென் மாவட்டங்களில்  கடந்த ஒரு வாரமாகவே  நல்ல காற்று வீசுகிறது. இதனால், காற்றாலை மின் உற்பத்தி கூடியது. இதையடுத்து, மின் வெட்டு அடியோடு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக 24 மணி நேரமும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் மாதம் பிறந்த பிறகு தென் மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கி விடும். அப்போது மேலும் 1,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்குமென அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நெல்லை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக அதிகளவில் மின்காற்றாலைகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக