டைரக்டரும், நடிகருமான சுந்தர்.சி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய 25வது டைரக்ஷ்னாக இயக்கும் படம் மசாலா கபே. விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். சுந்தர்.சி யின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தன்னுடைய அவினி சினி மேக்ஸ் பேனரில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
சுந்தர்.சியின் வழக்கமான காமெடி, ஆக்ஷ்ன், த்ரில்லர் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் இருக்கிறது. ஊட்டி, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக