வியாழன், 5 ஏப்ரல், 2012

Jeyalalitha:திமுக கட்டியதற்காக புதிய தலைமைச் செயலகத்தை மாற்றவில்லை

திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமைச் செயலகத்தை இடம் மாற்றவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார் நாமும் மற்றும் மகா ஜனங்களும் இதை அப்படியே உள்ளது உள்ளபடி நம்ப  முயற்சிப்போம் மேலும் அண்ணா அறிவாலயம் சாலைப்பணியாளர் விவகாரம் போன்ற ஏனைய விவகாரங்களுக்கும் இது பொருந்தும்..பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேரவை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் (காட்பாடி) புதன்கிழமை பேசும்போது, திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டுமா, முதல்வர் ஜெயலலிதா செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறியிருந்தார், இப்போது தலைமைச் செயலகம் கட்டி முடித்த பிறகு அதைக் கிடப்பில் போடலாமா என்றார்.
அப்போது மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டுப் பேசியது: புதிய தலைமைச் செயலகத்தைக் கிடப்பில் போடவில்லை. மக்களுக்குப் பயன்படும் வகையில் உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றவே முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி: விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே மக்களின் வரிப் பணத்தை அள்ளித் தெளித்து நெரிசல் மிகுந்த பகுதியில் அதைக் கட்டியுள்ளனர். எனவேதான் அதனை ஆக்கப்பூர்வமாக மாற்றும் வகையில் மருத்துவமனையாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.துரைமுருகன்: புதிய தலைமைச் செயலகம் எங்கள் பணத்தில் கட்டப்படவில்லை. மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா: துரைமுருகன் பேசும்போது ஏதோ இந்தப் பேரவையில் இடநெருக்கடி உள்ளது என்று நான் சொன்னதாகவும், அதற்காக அவர்கள் வேறு இடத்தில் புதிய பேரவைக் கட்டடத்தைக் கட்டியதாகவும், திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக நாங்கள் அதைப் புறக்கணிப்பதாகவும் பேசினார்.சட்டப்பேரவை அமைந்துள்ள இந்தக் கட்டடத்துக்குள் இடநெருக்கடி உள்ளது என்று நான் எப்போதும் கூறவில்லை. ஒட்டுமொத்தமாக தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி என்றுதான் குறிப்பிட்டேன்.திமுக ஆட்சிக் காலத்தில் இதற்காக விசாலமான ஒரு பெரிய இடத்தில் புதிய கட்டடத்தை எழுப்பியதாகக் கூறுகிறார். அது ஏதோ முழுவதுமாக தலைமைச் செயலகத்துக்குப் பயன்பட்டது போலவும், நாங்கள் வேண்டுமென்றே திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காக அதைப் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.துரைமுருகன் கூறுவது தவறான தகவல். அரசாங்கத்தில் மொத்தம் 36 துறைகள் இருக்கின்றன. இவர்கள் கட்டிய அந்தப் பெரிய கட்டட வளாகத்தில் திமுக ஆட்சியில் இருந்தவரை அங்கே செயல்பட்டது 6 துறைகள் மட்டும்தான். மீதமுள்ள 30 துறைகளும் கடைசிவரை இதே புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இவர்கள் அரைகுறையாகக் கட்டிவிட்டு, ஒட்டுமொத்த அரசுப் பணிகளும் அங்கே நிறைவேற முடியாதபடி அரசு அதிகாரிகள் இங்கும் அங்குமாக அலையவேண்டிய சூழ்நிலை இருந்தது.எனவே, அரசு நிர்வாகத்தில் பெரும் தாமதமும், குழப்பமும் ஏற்பட்டது. ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் அங்கே செயல்படும் அளவுக்கு கட்டடத்தைக் கட்டினார்களா என்றால் இல்லை.துரைமுருகன்: முதல்வர் ஒரு முறை தயவு செய்து நாமக்கல் மாளிகைக்குச் சென்று வரவேண்டும். போதிய வசதியின்மையில் அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது தெரியும்.முதல்வர் ஜெயலலிதா: நாமக்கல் மாளிகையில் போதிய வசதி இல்லை. அங்கே செயல்பட முடியவில்லை என்று கூறுகிறார். சரி, அதற்கெல்லாம் ஈடு செய்வதற்கு வசதியாக புதிய கட்டடத்தைக் கட்டி முடித்தார்களா என்றால் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக