திங்கள், 9 ஏப்ரல், 2012

லஞ்சம் கொடுக்க பணம் இல்லை! ஜீப்பில் குழந்தை பெற்ற பெண்!


உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்ததையடுத்து பெண் ஒருவர் ஜீப் ஒன்றில் குழந்தை பெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை (08.04.2012) இந்த சம்பவம் நடந்தது. விக்ரம் என்பவர் தனது மனைவி நீலத்தை பாக்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தார். அவரைச் சேர்க்க அவரது சுகாதார மையத்தினர் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இவரிடம் பணம் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் செல்ல தீர்மானித்தார். அப்போது நீலத்துக்கு ஜீப்பிலேயே குழந்தை பிறந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி ஜே.பி.ஷர்மா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக