திங்கள், 2 ஏப்ரல், 2012

வீரபாண்டிய கட்டபொம்மன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்

பழைய படங்களை விரும்பி பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தயாராக உள்ளது.சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போதும் பல திரையரங்குகளில் கர்ணன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த புதிய முயற்சி இன்னும் பல பழைய காலப் படங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் என்று அப்போதே ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு பலனாக, வீரபாண்டிய கட்டபொம்மன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது.கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கி ஸ்ரீ திவ்யா பில்ம்ஸின் ஷாந்தி சொக்கலிங்கம் இந்த தகவலை உறுதி செய்தார். சிவாஜி ரசிகர்களை கருத்தில் கொண்டுதான் கர்ணன் படத்தை வெளியிட்டோம். அது தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஆனால், கர்ணன் படத்தைப் பார்த்தவர்களின் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் கூட்டம் தான் என்பதும், நகரப் பகுதிகளில் கர்ணன் படத்திற்கு அமோக வரவேற்பு இருப்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.கட்டபொம்மன் படத்தின் திரையரங்கு உரிமையை வைத்துள்ள ராஜ் டிவியிடம் இது குறித்து பேசி வருகிறோம் என்றார் ஷாந்தி சொக்கலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக