திங்கள், 2 ஏப்ரல், 2012

16,800 வி.ஐ.பி.,க்களுக்கு 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

 ஆமா யார் அந்த VIP? இவனுங்க தான் பொறந்தானுங்களா இந்தியாவுல, நாங்கெல்லாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா?
புதுடில்லி: நாடு முழுவதும், 16 ஆயிரத்து 800 வி.ஐ.பி.,க்களுக்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாவும், இது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, இரண்டு மடங்கு அதிகம் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2010 நிலவரப்படி, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 16 ஆயிரத்து 788 வி.ஐ.பி.,க்களுக்கு, சம்பந்தபட்ட மாநில போலீசார், பாதுகாப்பு அளிக்கின்றனர். இந்த வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்புப் பணியில், 50 ஆயிரத்து 59 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்..,க்கள் உள்ளிட்டோர், இந்த வி.ஐ.பி.,க்களின் பட்டியலில் அடக்கம். வழக்கமாக, 16 ஆயிரத்து 788 வி.ஐ.பி.,க்களுக்கு, 28 ஆயிரத்து 298 போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், தற்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட, இரண்டு மடங்கு அதிக போலீசார், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், ""மாநிலங்களில் போலீசாரின் எண்ணிக்கை, குறிப்பிட்ட அளவில் தான் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அளிக்க வேண்டிய வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டியுள்ளது. வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், மறு ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்'' என்றார். கடந்தாண்டு ஜனவரியில், போலீஸ் ஆராய்ச்சி புலனாய்வுத் துறை தயார் செய்த அறிக்கையில், "ஒரு லட்சம் மக்களுக்கு, 131 போலீசார் என்ற விகிதாச்சாரம் உள்ளது. ஆனால், ஒரு லட்சம் பேருக்கு, 173 போலீசார் என்ற விகிதாச்சாரம் என்பது தான், அனுமதிக்கப்பட்ட அளவு. இதை கணக்கிடும்போது, பொதுமக்களுக்கான பாதுகாப்புக்கு, அனுமதிக்கப்பட்ட அளவை விட, குறைவான போலீசார் தான், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக