திங்கள், 30 ஏப்ரல், 2012

கலைஞர் பிரணாப் முகர்ஜியையும் அன்சாரியையும் ஜனாதிபதி தேர்தலுக்கு சிபார்சு

அன்சாரி மற்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளதாக

சென்னை : அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய ‌அமைச்சர் ஏ.கே.அந்தோணி சென்னையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை ஜனாதிபதி பதவிக்கு கருணாநிதி பரிந்துரை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக ஏற்கனவே சரத் பவாரை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, மே 4ம் ‌தேதி டில்லிக்கு வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியையும் சோனியா சந்திக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ஹமீது அன்சாரி, பிரணாப் முகர்ஜி மற்றும் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக