ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

அஜீத் தானே கழுவி சுத்தப்படுத்தினார் ஆடிப் போயிருக்கும் படக்குழு

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழுவிருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார்


ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.தலன்னா சும்மாத்தானா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக