வெள்ளி, 20 ஏப்ரல், 2012

மீனா இப்போது விஜய்க்கு அக்கா வாகிறார்!

நடிகை மீனாவின் தீவிர ரசிகர் விஜய். இதை பலமுறை அவரே கூறியுள்ளார். முன்பு ஷாஜகான் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன் என விஜய்யுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் மீனா.

இப்போது விஜய் படத்தில் அக்காவாக நடிக்கப் போகிறார். இருங்க இருங்க... விஜய்க்கு அக்கா அல்ல... விஜய் தயாரிக்கும் படத்தில் ஹீரோவுக்கு அக்கா!
நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. திருமணமான பிறகு ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.
தமிழில் தம்பிக்கோட்டை படத்தில் நரேனுக்கு அக்காவாக நடித்தார். தெலுங்கிலும் ஒரு படம் பண்ணார். ஆனால் தொடர்ந்து பல இயக்குனர்கள் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனாவை அணுகியபோது மறுத்துவிட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

30 வருடங்களுக்கு முன் இப்படத்தை விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திசேகரன் இயக்கி இருந்தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. இப்போது மகன் விஜய் இந்தப் படத்தை தயாரிக்க, மீண்டும் இயக்குகிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.

இதில் கதாநாயகனின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் என்று வாய்ப்பளித்துள்ளனர். விஜய்யே அவர் பெயரை பரிந்துரைத்தாராம்.

மீனா எனக்கு அம்மாவா நடிக்கணும் என ரஜினி ஒரு விழாவில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். நடந்துரும் போலிருக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக