வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பெண் கைதிகளை கொடுரமாக தாக்கிய பெண் அதிகாரிகள் ஜெயபாரதி, சாந்தி, ருக்குமணி

கோவில்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து திருடியதாக கடந்த 1ஆம் தேதி ஞானசவுந்தரி, லதா ஆகிய இருவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைத்துறை டிஐஜி துரைசாமி 4ஆம் தேதி, காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையை சுற்றிப்பார்த்தார். அப்போது ஞானசவுந்தரி, லதா ஆகிய இருவரும், சிறையில் கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை என்றும், சாôப்பாடு தரமில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
சிறைத்துறை டிஐஜி துரைசாமியிடம் புகார் கொடுத்ததற்காக, ஞானசவுந்தரி, லதா ஆகிய இருவரையும் சூப்பிரெண்ட் ஜெயபாரதி, ஜெயிலர் சாந்தி, வார்டன் ருக்குமணி மற்றும் பலர் அடித்து உதைத்ததாகவும், இதில் இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 7ஆம் தேதி இவர்கள் இருவரையும் நேரில் பார்த்தபோது மேற்கண்ட தகவலை தெரிவித்ததாகவும் ஞானசவுந்தரி, லதா ஆகியோரின் வழக்கறிஞர் பொன் முருகேசன், காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இருவரையும் அடித்ததில் 7 பிரம்புகள் உடைந்ததாகவும் புகாரில் வழக்கறிஞர் பொன்.முருகேசன் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மதுரை ஐகோர்ட்டிலும் மனு அளித்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (20.04.2012) மதுரை ஐகோர்ட்டில் வரும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சிறையில் கைதிகளான ஞானசவுந்தரி, லதா ஆகிய இருவரையும் அடித்து காயப்படுத்தியதாக சூப்பிரெண்ட் ஜெயபாரதி, ஜெயிலர் சாந்தி, வார்டன் ருக்குமணி உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக