திங்கள், 9 ஏப்ரல், 2012

ஓவியா-அஞ்சலி! கிளர்ச்சியில் ரசிகர்கள்!

களவானி, மெரினா ஆகிய படங்களில் தாவணி உடையில் வந்த ஓவியாவிற்கும் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களில் சுடிதாரில் வந்து கலக்கிய அஞ்சலிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால் அந்த உடைகள் இல்லாமல் இருந்தால்(அதாவது வேறு உடையில்) அவர்கள் எப்படி இருப்பார்கள்?  சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா(மிர்ச்சி), அஞ்சலி, ஓவியோ ஆகியோர் நடிக்கும் படம் மசாலா கஃபே. இந்த படத்தில் தான் அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள்.
ஹீரோவாக முயன்று அதில் சொதப்பல் ஏற்பட்டதால் தனது பெயரை ரசிகர்கள் மனதில் நிலைக்க வைக்கவே வேகமாக இந்த 
படத்தை இயக்க ஆரம்பித்தாராம் சுந்தர்.சி. அஞ்சலிக்கும், ஓவியாவிற்கும் இந்த உடை பொருந்துமா என்று யோசிக்காமல் திடீரென இந்த முடிவை எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. 

இவர்களின் கவர்ச்சியான தோற்றத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் இயக்குனரின் தைரியமான முடிவை பாராட்டத் தான் வேண்டும். படத்தில் இன்னும் இது போல் என்னவெல்லாம் இருக்கிறதோ என்ற ஆவலில் இருக்கும் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பார்த்தால் சுந்தர்.சி-யின் "மசாலா கஃபே" படம் என்று சொல்வதற்கு பதிலாக சுந்தர்.சி-யின் "மசாலா" படம் என்று சொல்ல வேண்டியிருக்கும் போல..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக