சனி, 28 ஏப்ரல், 2012

மீண்டும் மோடிக்கு விசா இல்லை; அமெரிக்கா அறிவிப்பு


வாசிங்டன், ஏப். 26- குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது.
மோடிக்கு விசா வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க எம்.பி. வால்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப் பிய கேள்விக்குப் பதி லளித்த அமெரிக்க வெளி யுறவுத்துறைச் செய லாளர் விக்டோரியா நுலந்த் கூறுகையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது 2005 ஆம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. அதில் எந்த ஒரு மாற்ற மும் இல்லை என்றார்.

இதனிடையே அமெ ரிக்கா வாழ் இந்திய முஸ்லிம்கள் அமைப் பும் நரேந்திர மோடிக்கு விசா வழங் கக் கூடாது என்ற 2005 ஆம் ஆண்டு முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று வலி யுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க எம்.பி; வால்ஸ், நரேந் திர மோடியை ஆதரிப் பதை அந்த அமைப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
குஜராத்தில் சிறு பான்மையினர் படு கொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து மோடிக்கு விசா வழங்கு வதில்லை என்று அமெ ரிக்க அரசு தீர்மானித் திருந்தது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக