சனி, 28 ஏப்ரல், 2012

8 வயது மாணவியை 35 வயது பேராசிரியர் திருமணம் செய்தார் சட்டம் தூக்கம்

8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த பேராசிரியர்ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்தமானியம் மண்டலம் தாடிமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுனில்ரெட்டி என்பவரது 13 வயது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.இந்த பெண் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது திருமணத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரமேஷிடம் சென்றும் அறிவுரை கூறினர். இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். ரமேஷூக்கு, தங்களது மகளை திருமணம் செய்து வைப்பதில் மாணவியின் பெற்றோர் பெரிதும் விரும்பினர்.


இந்நிலையில் திருமண பத்திரிகை கொடுத்தால் ஊர் மக்கள் பிரச்னையை பெரிதுபடுத்திவிடுவார்கள் என இருவீட்டாரும் கருதினர். எனவே திருமணத்தை வேறுபகுதியில் ரகசியமாக நடத்தி முடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி மதனப்பள்ளி அயோத்தியா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஒரு கோயிலுக்கு நேற்று சென்றனர். நெருங்கிய உறவினர்கள் என சுமார் 20 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர். அதிகாலை 5 மணியளவில் சிறுமியின் கழுத்தில் பேராசிரியர் தாலி கட்டினார். கோயில் பூசாரி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இதுகுறித்து தகவலறிந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் அந்த கோயி ல் முன் திரண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர், ‘புதுப்பெண்ணை’ அவசர, அவசரமாக அழைத்துக்கொண்டு பைக்கில் ஏறி புறப்பட்டார். இதேபோல் திருமணம் நடத்தி வைத்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டனர்.இதுகுறித்து மதனப்பள்ளி 2வது போலீசாருக்கு கிராம மக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட் டது. சப்&இன்ஸ்பெக்டர் கங்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியிடம் விசாரித்தனர்.இது தொடர்பாக பேராசிரியரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக