இப்போது அது குழந்தை முதல் வயதானவர் வரை பேவரிட் ஸ்நாக்ஸ் ஆகி விட்டது என்கிறார் பெஸ்ட். அதற்கு சில உதாரணங்களையும் அவர் கூறுகிறார். விழாக்கள், நிகழ்ச்சிகள், விருந்து, விசேஷங்களில் முன்பு இனிப்பு இடம்பெறும். ஆனால், அவற்றை ஓரங்கட்டி இப்போது சாக்லேட் பார்கள் தாம்பாளங்களை நிறைக்கின்றன. காதல் முதல் தேர்தல் வரை வெற்றி என்றால் இனிப்பு எடு, கொண்டாடு என்று சாக்லேட் இடம் பிடித்து விட்டது. இப்படி மக்கள்தொகையில் பெரும்பகுதியை கொண்டுள்ள இந்தியா, சீனாவில் சாக்லேட் தேவை அதிகரிக்கும் நிலையில், அதன் மூலப்பொருளான கோகோ கொட்டை உற்பத்திக்கான சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் மட்டுமே கோகோ உற்பத்தியாகிறது. அதிக தேவை காரணமாக அந்நாடுகளால் ஆர்டர்களை சமாளிக்க முடியவில்லை. அதனால், விரைவில் உலகம் முழுவதும் சாக்லேட் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறார் பெஸ்ட். இதை தவிர்க்க கோகோ உற்பத்தியை அதிகரிக்கும் புதுமை சாகுபடி முறைகளையும் விவசாயிகளுக்கு அவர் அளித்து வருகிறார். முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். |