வியாழன், 19 ஏப்ரல், 2012

ராமஜெயத்தை போலீஸ் தடுத்துவந்ததால் கொல்லப்பட் டார்????

ராமஜெயத்தை, வெளிநாட்டுக்குப் போகவிடாமல் போலீஸ் தடுத்துவந்ததும் அவர் திட்டமிட்டபடி போயிருந்தால் கொலையிலிருந்து தப்பியிருப்பார்
ராமஜெயம் மார்ச் 29-ந் தேதி அதிகாலை கொல்லப்பட் டார். கொலை நடந்து 20 நாட்கள் ஆகிய நிலையிலும் ’குற்றவாளியை நெருங்கி வருகிறோம்... நெருங்கிவிட்டோம்’ என்ற ரீதியிலேயே காவல்துறை கதை சொல்லிக் கொண்டிருக்கிறது.


தனது வியாபாரம் தொடர் பாக வெளிநாட்டுக்குப் போக ரெடியாக இருந்த ராமஜெயத்தை, வெளிநாட்டுக்குப் போகவிடாமல் போலீஸ் தடுத்துவந்ததும் அவர் திட்டமிட்டபடி போயிருந்தால் கொலையிலிருந்து தப்பியிருப்பார் என்பதும் நமது விசாரணையில் தெரியவந்தது.

ஆட்சி மாற்றம் நடந்தபின் மேலிட உத்தரவுப்படி தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு வழக்குகளை பதிவுசெய்வதில் தமிழக காவல் துறை தீவிரம் காட்டியது. முன்னாள் அமைச்சர் நேரு மீது 11 வழக்கும் அவரது தம்பி ராமஜெயம் மீது 5 வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நேருவைக் கைது செய்த போலீஸ், ராமஜெயத்தை கடந்த செப்டம்பர் 5-ந் தேதி அதிகாலை கொச்சி ஏர்போர்ட் டில் வைத்து கைது செய்தது. ராமஜெயமோ அக்டோபர் 2-ந் தேதி எல்லா வழக்கு களில் இருந்தும் ஜாமீன் வாங்கி 5-ந்தேதி வெளியே வந்தார். உடனே "என் வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்லவேண்டும். எனவே என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை என்னிடம் ஒப்படைக்கச் செய்யுங்கள்'’என டிசம்பரில் திருச்சி ஜே.எம். கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு பிப்ரவரி 13-ந் தேதி தள்ளுபடியாக, பிப்ரவரி 15-ந் தேதியே மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராமஜெயம்.
இதை விசாரித்த நீதிபதி சுதந்திரம், மார்ச் 2-ந் தேதி ராமஜெயத்திடம் அவரது பாஸ்போர்ட்டை ஒப்ப டைக்கும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் ராமஜெயத்திடம் அவரது பாஸ்போர்ட்டை மார்ச் 9-ந் தேதி ஒப்படைத்தது. கைதுக்கு முன்பாக தேடப்பட்ட நிலையில் ராமஜெயம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டில் வைக்கப்பட்ட ’லுக் அவுட் நோட்டீஸ்’ என்கிற முத்திரை யை அகற்றாமலே பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர். இந்த முத்திரை இருந்தால் இமிக்கிரேஷன் அலுவலகங்கள் வெளிநாடு போகவிடாமல் தடுத்துவிடும். எனவே இந்த முத்திரையை அகற்றும்படி மார்ச் 10-ந் தேதி பாரின் ரிலேசன்ஷிப் ரிஜிஸ்டர் அலு வலகத்துக்கு மெயில் அனுப்பி னார் ராமஜெயம். அந்த அலுவலகமோ "திருச்சி காவல்துறை கமிஷனர்தான் லுக் அவுட் நோட்டீஸ் முத்தி ரையை வைக்கச் சொன்னார். எனவே அவரிடமே ரத்து செய்துகொள்ளுங்கள்'’என மார்ச் 15-ல் பதில் கொடுத்தது.

இந்த நிலையில் காவல் துறை அதிகாரிகள், ராம ஜெயத்தின் பாஸ்போர்ட்டை காலாவதியாக்குங்கள் என இமிக்கிரேஷன் அலுவலகத்தை நிர்பந்திக்க, இதையறிந்த ராமஜெயம் ‘"இமிக்கிரேஷன் ஆபீஸரும் திருச்சி காவல்துறை கமிஷனரும் என் பாஸ் போர்டை முடக்கப் பார்க்கி றார்கள்'’என மதுரை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 20-ந் தேதி மனுதாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி சுதந்திரமோ "மார்ச் 30-ந் தேதிக்குள் மேற்கண்ட இரண்டு அதிகாரிகளும் நீதிமன்றத்திற்கு இது தொடர்பாக விளக்கம் தரவேண்டும்'’ என உத்தரவு பிறப்பித்தார்.

29-ந் தேதி காலை தனது வழக்கறிஞர் பாஸ்கருடன் திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி யைப் பார்க்க திட்டமிட்டிருந்தார் ராமஜெயம். இதற்கு வாய்ப்பு தராமல் அதேநாள் அதிகாலை யில் ராமஜெயம் கொடூரமாகக் கொல்லப்பட்டி ருக்கிறார். பாஸ்போர்ட் இழுத்தடிப்பு விவகாரம் கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

கொலைக்காகத்தான் இழுத்தடிப்பா? இழுத்தடிப்பால்தான் கொலையா? என திருச்சிக்காரர்கள் கலக்கத்தோடு விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறையின் மெத்தன செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிக்கொண்டி ருக்கிறது.
thanks nakkeeran + shankar trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக