வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க திட்டமில்லை


உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
புதுடில்லி, ஏப். 19- ராமன் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
ழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்தது.
மத்திய அரசின் பதிலையடுத்து ராமன் பால வழக்கு ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக