சனி, 7 ஏப்ரல், 2012

மம்தா அரசு:பள்ளி புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ் குறித்த பாடங்கள் நீக்கம்:

கோல்கட்டா: மேற்கு வங்க மாநில பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று பாடப் புத்தகங்களில் இருந்து, தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் பற்றிய பாடங்களை நீக்க, மம்தா தலைமையிலான திரிணமுல் அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளின் ஆட்சி நடந்தது. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா தலைமையிலான திரிணமுல் அரசு வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று பாடப் புத்தகங்களில், ஜெர்மனைச் சேர்ந்த தத்துவ மேதையான கார்ல் மார்க்ஸ் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, எட்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடங்களில், தொழில் புரட்சி குறித்து, கார்ல் மார்க்ஸ் கூறிய விவரங்கள் இடம் பெற்றுஇருந்தன.


மாற்றம்: இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் பாடத் திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கார்ல் மார்க்ஸ் பற்றிய பாடங்களை, பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம், மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமநிலையான போக்கு: இதுகுறித்து பள்ளி பாடத் திட்ட கமிட்டி தலைவர் அவிக் மஜும்தார் கூறியதாவது: கார்ல் மார்க்ஸ் பற்றிய பாடங்களை முழுவதுமாக நீக்கவில்லை. எங்கெல்லாம், கார்ல் மார்க்ஸ் பற்றிய குறிப்புகள் தேவைப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அந்த குறிப்புகள் இடம்பெறும். தேசப்பிதா மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோர் பற்றிய விவரங்கள், முந்தைய வரலாற்று பாடப் புத்தகங்களில் இல்லை. இவை, தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பாடப் புத்தகங்களில், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து, பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதை மாற்றி, சமநிலையான ஒரு அணுகுமுறையை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, பாடத் திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவிக் மஜும்தார் கூறினார்.
 
mnathumitha - CA,யூ.எஸ்.ஏ
தங்கராஜா அவர்களே தயவு செய்து மம்தாவை ஜெயா மற்றும் மாயாவோடு ஒப்பிடாதீர்கள் மாயவும், ஜெயாவும் ஒரே குணம் கொண்டவர்கள், ஆடம்பரம், புகழ்ச்சி இல்லாமல் அவர்களால் வாழவே முடியாது. ஜெயா தனது பெயரில் அரசு போக்குவரத்து கழகம் தொடங்கினார், திரைப்பட நகருக்கு தனது பெயரை சூட்டினார், மாயவோ மாநிலம் எங்கும் தனது சிலையை நிறுவினார் ஆனால் மம்தா மிகவும் எளிமையானவர், அவரிடம் ஆடம்பரம் சிறிதளவும் இல்லை. நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி பற்றிய பாடங்களை வைக்காமல் காரல்மார்க்ஸ் பற்றி பாடங்களைமட்டுமே வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை திணிப்பை மம்தா நீக்கி இருக்கிறார் ஜெயா மாதிரி எதிர்க்கட்சி ஆட்சியில் வந்த நூலகத்திர்க்கோ அல்லது மற்ற உருப்படியான திட்டங்களுகோ மம்தா சமாதி கட்டியது இல்லை. மேலும் தனது சொந்த சகூதரர்கள் கட்சி விஷயங்களில் தலை இட்டதால் சொந்த வீட்டை விட்டே வெளியேறி வாடகை வீட்டில் வசித்தார். அனால் ஜெயலலிதா இன்று தனது தோழி சசிகலா குடும்பத்திற்கு தமிழ்நாட்டையே அடகு வைத்து விட்டார் மாயாவும் ஜெயாவும் ஒன்னு இதை அறியாத மக்கள் வாயில் மண்ணு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக